azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 09 Apr 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 09 Apr 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Though you do not see the roots or know how far, wide or deep they are clutching the earth, you pour water around the trunk so that it may reach the roots, is it not? You expect that when roots contact the water, the tree will grow and yield fruit. Similarly, understand that there is God, the very basis of creation; pray to Him, and He will shower fruits. The chief means by which you detach your mind from distractions and attach yourselves to the search of God are communion with God (Yoga) and sacrifice (Tyaga). Desire (Kama) must be conquered by Tyaga and Rama (God) must be secured by Yoga. Desire discolours intelligence, perverts judgement and sharpens the appetites of the senses. It lends a false lure to the objective world. When desire disappears or is concentrated on God, intelligence is self-luminous, it shines in its pristine splendour, revealing God within and everywhere. That is true Self-Realization (Atma Sakshatkara)! [Divine Discourse, May 15, 1969]
REAL PEACE OF MIND HAS NO UPS AND DOWNS; IT CANNOT BE PARTIAL IN ADVERSITY
AND WHOLE IN PROSPERITY. - BABA
நீங்கள் வேர்களைப் பார்க்கவோ அல்லது அவை எவ்வளவு தூரம்,அகலம் அல்லது ஆழத்தில் மண்ணைப் பற்றிக் கொண்டு இருக்கின்றன என்பதை அறியவோ முடியா விட்டாலும் கூட, மரத்தைச் சுற்றி அது வேர்களைச் சென்று அடையக் கூடும் என, நீங்கள் நீரை ஊற்றுகிறீர்கள் அல்லவா? வேர்கள் நீருடன் தொடர்பு கொள்ளும்போது, மரம் வளர்ந்து, பழங்களைத் தரும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். அதைப் போலவே, படைப்பின் ஆதாரமான இறைவனும் இருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்; அவனைப் பிரார்த்தியுங்கள்; அவன் பலன்களைப் பொழிந்திடுவான்.உங்கள் மனதைக் கவனச்சிதறல்களில் இருந்து விலக்கி, உங்களை இறைவனைத் தேடுதலோடு இணைக்க வைப்பதற்கான பிரதான வழிகள் யோகமும், தியாகமுமே. ஆசையைத் ( காமம்), தியாகத்தால் ( தியாகம்) வென்று, யோகத்தால் இறைவனைப் ( ராமனை) பெற வேண்டும். ஆசை, புத்தியை மங்கச் செய்து, விவேகத்தைத் வக்கிரப் படுத்தி, புலன்களின் பசியைக் கூர்மையாக்கி விடுகின்றன. பொருட்களாலான உலகத்திற்கு , ஒரு பொய்யான கவர்ச்சியைத் தந்து விடுகின்றன.ஆசை மறைந்து அல்லது அது இறைவன் பால் குவிக்கப் படும் போது, புத்தி, சுயம்பிரகாசமடைந்து, , தனது ஆதி காந்தியுடன் ஒளிர்விட்டு, இறைவனை உள்ளும், எங்கும் வெளிப்படுத்துகிறது. இதுவே உண்மையான ஆத்ம சாக்ஷாத்காரமாகும் !
உண்மையான மனச்சாந்தி என்பது ஏற்றத் தாழ்வு அற்றது; அது வறுமையில் பாதியாகவும், வளமையில் முழுமையானதாகவும் இருக்க முடியாது - பாபா