azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 08 Apr 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 08 Apr 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

You may have witnessed chariot festivals (Rathotsavam) in pilgrimage centers. Huge temple chariots are gorgeously decorated with flags and festoons, stalwart bands of men draw them along the roads to the music of blowpipes and conches, and dancing groups and chanters precede it, adding to the exhilaration of the occasion. Thousands crowd around the holy chariot. Their attention is naturally drawn towards the entertainment, but they feel happiest only when they fold their palms and bow before the Idol in the chariot. The rest is all subsidiary, even irrelevant. So too in the process of life, body is the chariot, and the Atma is the Idol installed therein. Earning and spending, laughing and weeping, hurting and healing, and the various acrobatics in daily living are but subsidiary to the adoration of God and the union with the Lord. [Divine Discourse, Jan 13, 1969]
THE INDIVIDUAL WHO EXPERIENCES THE BLISS OF UNION WITH THE DIVINE
HAS THE STRENGTH OF A THOUSAND ELEPHANTS. - BABA
நீங்கள் பல புண்ய க்ஷேத்ரங்களில் தேரோட்டத்தைப் (ரதோத்ஸவம்) பார்த்திருக்கக் கூடும். அழகாக, தோரணங்களால் அலங்கரிக்கப் பட்டு, பலசாலியான தொண்டர் குழுக்களால், நாதஸ்வரமும், சங்கநாதமும் முழங்க, அந்த விழாவிற்கு உற்சாகம் ஊட்டும் ஆடல் பாடல்கள் முன் செல்ல, வீதிகளில், பிரம்மாண்டமான கோயில் தேர்கள் இழுத்துச் செல்லப் படும். ஆயிரக்கணக்கானவர்கள் நிறைந்த கூட்டம், அந்தப் புனிதத் தேரைச் சுற்றி இருக்கும். அவர்களது கவனம் இயற்கையாகவே அந்தக் கொண்டாட்டங்களால் ஈர்க்கப் பட்டாலும், அந்தத் தேரில் கொலு வீற்றிருக்கும் விக்ரஹத்தின் முன், கை குவித்து, தலை வணங்கும் போது தான் அவர்கள் அதிகமாக மகிழ்ச்சி அடைகிறார்கள். மற்றவை எல்லாம், குறைந்த முக்கியத்துவமானவை, ஏன் அர்த்தமற்றவையானவையே என்றும் கூடக் கூறலாம். வாழ்க்கை முறையும் அவ்வாறே; இந்த உடலே தேர் , ஆத்மாவே அதில் கொலு வீற்றிருக்கும் தெய்வம். சம்பாதிப்பது, செலவிடுவது, சிரிப்பது, அழுவது, துன்புறுத்துவது, குணமடைவது போன்ற அன்றாட வாழ்க்கையின் பலவிதமான குட்டிக் கரணங்கள், இறைவனைப் போற்றுவது மற்றும் அவனுடன் ஒன்றரக் கலப்பது என்பதைப் பொறுத்தவரை, இரண்டாம் பட்சமானவையே அன்றி வேறல்ல.
இறைவனுடன் ஒன்றரக் கலப்பதை அனுபவிக்கும் ஒருவர்,
ஒரு ஆயிரம் யானை பலம் கொண்டவராக இருப்பார்- பாபா