azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 07 Apr 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 07 Apr 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Culture lies in seeing unity in diversity, with a deep-seated faith in the unity of life. Nourish your faith in the caste of humanity and the culture of love. Here love does not refer to the bodily affection that marks the relationship between a wife and husband, between children and parents, or between friends. The son, though he loved his mother with all his heart, flings her body onto the burning pyre and consigns her to flames without any mercy after her death. How can such love be called true Love? All such relationships can at best be termed ‘attachment’! Attachments, like passing clouds that sail away, come in the middle and pass off in the middle. But Love existed even before birth and will last after death. There is no love between husband and wife before their wedding or between the mother and the child before the child was born. Only Divine Love exists before birth and lasts after death. [Summer Roses on Blue Mountains 1996, Ch 1]
SELF-CONFIDENCE IS BORN OF CONFIDENT ACTION. - BABA
வாழ்க்கையின் ஒற்றுமையில் ஒரு ஆழ்ந்த நம்பிக்கையுடன், வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்பதில் தான் கலாசாரம் இருக்கிறது. மனித குலம் மற்றும் ப்ரேம கலாசாரத்தின் மீது உங்கள் நம்பிக்கையை பேணுங்கள். இங்கு ப்ரேமை என்பது,ஒரு கணவன் மற்றும் மனைவி, பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள், அல்லது நண்பர்கள் ஆகியோருக்கு இடையில் இருக்கும் உடல் ரீதியான பாசத்தைக் குறிப்பிடவில்லை. ஒரு மகன், தன் முழு இதயபூர்வமாக தனது தாயை நேசித்தாலும் கூட, அவளது மரணத்திற்குப் பிறகு, எந்த வித கருணையும் இன்றி, அவளது உடலை எரியும் சிதையில் எறிந்து அவளை நெருப்பிற்கு இரையாக்கி விடுகிறான். இப்படிப் பட்ட ப்ரேமையை, உண்மையான ப்ரேமை என்று எவ்வாறு கூற முடியும்? இப்படிப் பட்ட அனைத்து உறவுகளையும், அதிக பட்சம் ‘’பற்றுதல்’’ என்று தான் கூற முடியும். கலைந்து சென்று விடும் மேகங்களைப் போல, பற்றுதல்களும், நடுவில் வந்து, நடுவிலேயே சென்று விடுகின்றன. ஆனால், ப்ரேமை பிறப்பிற்கு முன்பே கூட இருந்து, இறப்பிற்கு பின்னும் கூட நிலைத்து நிற்பதாகும். திருமணத்திற்கு முன்பு, கணவன் மற்றும் மனைவிக்கு இடையிலோ, குழந்தை பிறப்பதற்கு முன்பு தாய்க்கும், குழந்தைக்கும் இடையிலோ, ப்ரேமை இருப்பதில்லை. தெய்வீக ப்ரேமை மட்டுமே பிறப்பிற்கு முன்பும் இருந்து, இறப்பிற்கு பின்பும் நிலைத்து நிற்கும்.
தன்னம்பிக்கை என்பது, நம்பிக்கையுடன்
ஆற்றப்படும் செயலிலிருந்தே பிறக்கிறது - பாபா