azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 05 Apr 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 05 Apr 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

The feelings we experience in dreams disappear when we wake up. The things we see when awake are also short lived. During sleep, we are not aware of the world at all. Though the body is in the bedroom, when we dream, it is direct and dramatic, like for example we may see ourselves shopping on the Mount Road in Chennai! So, the waking, dreaming and sleeping stages are all only relatively and deceivingly real. Let us say, you are coming towards the hostel at dusk singing bhajans. A boy in the front row suddenly shouts in fear, "Snake Snake", that fear will overtake you all. It will make all of you step back. But, was it really a snake? Say a boy then looks at it with a lit torch and finds out that it was only a rope! Ignorance (the thought it was a snake and the fear) caused it, knowledge removed it. Similarly when the ‘torch’ lights up the world, it will be revealed to be God. [Divine Discourse, Jan 08, 1983]
THOUGHTS OF GOD, CONTEMPLATION OF GOD, AND GRACE OF GOD –
THESE ALONE CAN CONFER THE PURITY WE NEED. - BABA
கனவுகளில் நாம் அனுபவிக்கும் உணர்வுகள், நாம் கண் விழித்தவுடன் மறைந்து விடுகின்றன. நாம் விழித்தபின் , நாம் காணும் பொருட்களும் கூட தாற்காலிகமானவையே. தூக்கத்தின் போது, நமக்கு உலகைப் பற்றிய உணர்வு அறவே இருப்பதில்லை. உடல் படுக்கை அறையில் இருந்தாலும் கூட, நாம் கனவு காணும் போது, அது நேரடியானதும், வியக்கத் தக்கதாகவும் உள்ளது ; உதாரணமாக, நாம், நம்மையே சென்னையில் மவுண்ட் ரோடில் கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு இருப்பதைப் போலக் காணக் கூடும் ! எனவே, விழிப்பு, கனவு மற்றும் உறக்க நிலைகள் அனைத்தும், ஒன்றுக்கொன்று ஒப்பிடத் தக்க மற்றும் ஏமாற்ற வல்ல விதத்தில் உண்மையானவையே. மாலையில் நீங்கள் விடுதியை நோக்கி பஜனை பாடிக் கொண்டே வந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். முன் வரிசையில் இருக்கும் ஒரு பையன் திடீரென்று பயத்தில், ‘’ பாம்பு, பாம்பு ‘’ என்று கத்தினால், உங்கள் அனைவரையும் அந்தப் பயம் ஆக்ரமித்து விடுகிறது. அது உங்கள் அனைவரையும் பின் நோக்கிச் செல்ல வைக்கும். ஆனால், அது உண்மையிலேயே ஒரு பாம்பு தானா? பின்னர் , ஒரு பையன்,ஒரு டார்ச்சை ஏற்றி, அதைப் பார்த்து விட்டு, அது ஒரு கயிறு மட்டுமே என்று கண்டு கொள்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள் ! அறியாமை (அது ஒரு பாம்பு என்ற எண்ணம் மற்றும் அதைப் பற்றிய பயம்) இதை உண்டாக்குகிறது; அறிவு அதை நீக்கி விடுகிறது. அதைப் போலவே, ‘’ டார்ச் ‘’ ( ஞானம்) , இந்த உலகிற்கு ஒளியூட்டும் போது, அதுவே இறைவன் என்பதை வெளிப்படுத்தும்.
இறைச் சிந்தனைகள், இறைத் தியானம் மற்றும் இறை அருள் ஆகியவை மட்டுமே, நமக்குத் தேவையான பரிசுத்தத்தை அளிக்க முடியும்- பாபா