azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 27 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 27 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Now, engage yourself in spiritual discipline, spiritual thoughts and spiritual company. Forget the past. At least from now on, seek to save yourself. Never yield to doubt or unsteadiness. That is a sign of ignorance. Have faith in any one name and the form indicated by that name. If you revere Shiva and hate Vishnu, the plus and the minus cancel out and the net result is zero. I will not tolerate the slightest hatred of any Name or Form. The wife has to revere the husband, but that does not mean that she has to hate his parents, brothers or sisters. You can never attain the Lord through hatred of one or more of His many Forms and Names. If you throw contempt at the God that another reveres, the contempt falls on your own God. Avoid factions, quarrelling, hating, scorning and fault-finding; they recoil on you. Remember, everyone is a pilgrim towards the same goal; some travel by one road, some by another. (Divine Discourse,Oct 10, 1964)
ALL ARE ONE, BE ALIKE TO EVERYONE. - BABA
ஆன்மீக சாதனை, ஆன்மீக சிந்தனைகள் மற்றும் ஆன்மீக நட்பு வட்டத்தில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். கடந்த காலத்தை மறந்து விடுங்கள்.இப்போதிலிருந்தாவது, உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயலுங்கள்.சந்தேகம் அல்லது தடுமாற்றத்திற்கு ஒரு போதும் இடம் கொடுக்காதீர்கள்.அது அறியாமையின் அறிகுறியாகும். ஏதாவது ஒரு இறை நாமம் மற்றும் அந்த நாமம் குறிக்கும் ரூபத்தில் நம்பிக்கை வையுங்கள். நீங்கள் சிவனை ஆராதித்து, விஷ்ணு வெறுத்தால், அது ஒன்றுக்கொன்று சரியாகி, விளைவு பூஜ்யமாகி விடும். எந்த ஒரு இறை நாமம் அல்லது ரூபத்தின் மீதான சிறிதளவு த்வேஷத்தைக் கூட நான் சகித்துக் கொள்ள மாட்டேன். மனைவி கணவனை மதிக்க வேண்டும்; ஆனால் அதன் பொருள், அவரது பெற்றோர்கள், சகோதர, சகோதரிகளை அவள் வெறுக்க வேண்டும் என்பதல்ல. இறைவனது ஒன்று அல்லது பல நாம, ரூபங்களை வெறுப்பதன் மூலம், நீங்கள் இறைவனை அடையவே முடியாது. மற்றவர் ஆராதிக்கும் இறைவனை நீங்கள் அவமதித்தால், அந்த அவமதிப்பு உங்களது சொந்த இறைவன் மீதே விழும். பிரிவினைகள், சண்டையிடுதல், வெறுத்தல்,ஏளனம் செய்தல் மற்றும் குறை காணுதல் ஆகியவற்றைத் தவிர்த்து விடுங்கள் ; அவை உங்கள் மீதே திரும்பப் பாயும். ஒவ்வொருவரும் ஒரே இலக்கை நோக்கி, சிலர் ஒரு வழியிலும், சிலர் வேறு வழியிலும், பயணம் செய்யும் தீர்த்த யாத்திரீகரே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அனைவரும் ஒன்றே. அனைவரிடம் ஒன்று போல நடந்து கொள்ளுங்கள் - பாபா