azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 24 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 24 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Many grieve: “It is said that getting the opportunity to see a holy person (darshanam) is destruction of sin (papa nashanam). Well, I have had darshan not once but many times, and yet my evil fate has not left me and I am suffering even more than I did before.” True, you may have come and had darshan, and you have sown fresh seeds secured from then onwards - seeds of love, faith, devotion, good company, Godly thoughts, remembering God’s name and so on, and you have learnt the art of intensive cultivation and soil preparation. So you have now sown the seeds in a well-prepared field of cleansed hearts. Don’t you have to wait for the harvest? Until the new harvest comes in, like you consume the grain already stored from previous harvests, the troubles and anxieties are the crops you collected in previous harvests! Hence do not grieve and lose your heart. Persist in your sadhana! (Shivaratri Discourse, March 1963)
WHATEVER THE TROUBLE, HOWEVER GREAT THE SORROW,
PERSIST AND WIN BY RECOLLECTING THE LORD. - BABA
பலர், ‘’ ஒரு புனிதமான ஆன்றோரின் தரிசனம் செய்யும் வாய்ப்பு, பாவத்தை அழிக்கிறது (பாபநாசனம்) என்று சொல்லப் படுகிறது. நல்லது, நான் ஒருமுறை அல்ல பல முறை தரிசனம் செய்து விட்டேன், இருந்தாலும் எனது தீய வினை என்னை விட்ட பாடில்லை; நான் முன்பை விட அதிகமாகக் கஷ்டப்படுகிறேனே ‘’ என்று புலம்புகிறார்கள். உண்மை தான், நீங்கள் வந்து, தரிசனத்தைப் பெற்றிருக்கலாம்; புதிதாகப் பெற்ற, ப்ரேமை, நம்பிக்கை, பக்தி, நல்லோரின் நட்பு வட்டம், தெய்வீக சிந்தனைகள், இறை நாமஸ்மரணை போன்ற புதிய விதைகளை இப்போதிலிருந்து நீங்கள் விதைத்திருக்கிறீர்கள் மேலும் நீங்கள் தீவிர விவசாயம் மற்றும் மண் பண்படுத்துதலின் கலையைக் கற்றுக் கொண்டுள்ளீர்கள். எனவே, நீங்கள், நன்கு பண்படுத்தப் பட்ட பரிசுத்தமான இதயங்கள் எனும் நிலத்தில் , இப்போது தான் இந்த விதைகளை விதைத்துள்ளீர்கள். நீங்கள் அதன் அறுவடைக்காகக் காத்திருக்க வேண்டாமா? புதிய அறுவடை வரும் வரை, முந்தைய மகசூல்களிலிருந்து நீங்கள் சேர்த்து வைத்துள்ள தானியங்களை உண்பதைப் போல, நீங்கள் இப்போது அனுபவிக்கும் கவலைகள் மற்றும் துன்பங்கள், உங்களது முந்தைய அறுவடைகளில் நீங்கள் குவித்து வைத்துள்ளவையே ! எனவே, மனம் வருந்தி, தைரியத்தை இழக்காதீர்கள். உங்கள் ஆன்மீக சாதனையை விடாது தொடர்ந்து செய்யுங்கள் !
துன்பம் எதுவானாலும், துயரம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், இடையறாத இறைநாமஸ்மரணையின் மூலம் வெற்றி பெறுங்கள்- பாபா