azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 23 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 23 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
For treading the path of devotion, one needs no scholarship, nor wealth nor riches, nor ascetic rigours. Tell Me, what was the lineage of Valmiki, the wealth of Kuchela, the scholarship of Sabari, the age of Prahlada, the status of Gajaraja, and the attainments of Vidura? Pure Love (Prema) — that was all they had, and that was all they needed. The grace of the Lord is as the ocean - vast and limitless. By your spiritual disciplines, your repetition of a name of God, meditation, and systematic cultivation of virtue, this grace is converted into clouds of truth. This cloud rains on humanity as showers of prema, which collect and flow as the flood of bliss (ananda) back again into the ocean of the Lord’s grace. When prema embraces humanity, we call it compassion, the quality not of pity but of sympathy — sympathy that makes one happy when others are happy and miserable when others are unhappy. (Divine Discourse, Mar 24, 1958)
DEVOTION CALLS FOR UTILIZING THE MIND, SPEECH AND BODY TO WORSHIP THE LORD. - BABA
பக்தி மார்க்கத்தில் செல்வதற்கு ஒருவருக்கு பாண்டித்யமோ அல்லது சொத்தோ அல்லது வளமையோ அல்லது சந்நியாசிக்கு உரிய கடுமையான விரதங்களோ தேவையில்லை. வால்மீகியின் குலம் , குசேலரின் வளமை, சபரியின் பாண்டித்யம், ப்ரஹலாதனின் வயது, கஜராஐனின் நிலை, விதுரரின் அறிவாற்றல்கள் என்ன என்ற எனக்குக் கூறுங்கள் பார்ப்போம். பரிசுத்தமான ப்ரேமை – அவர்களிடமிருந்தது எல்லாம் அது மட்டுமே; அவர்களுக்குத் தேவைப் பட்டது எல்லாம் அது ஒன்றே. இறைவனது அருள் கடலைப் போன்று பரந்து விரிந்ததும், எல்லைகளற்றதும் ஆகும்.உங்களது ஆன்மீக சாதனைகள், உங்களது இறைநாமஸ்மரணை, தியானம், முறையாக நல்லொழுக்கத்தை வளர்த்துக் கொள்வது ஆகியவற்றின் மூலம், இந்த அருள் சத்தியத்தின் மேகங்களாக மாற்றப் படுகிறது.இந்த மேகம், மனித குலத்தின் மீது ப்ரேம மழையாகப் பொழிகிறது; அது ஒன்று சேர்ந்து, இறை அருளின் சாகரத்திற்குள் ஆனந்த வெள்ளமாகத் திரும்பி ஓடிக் கலந்து விடுகிறது. ப்ரேமை, மனித குலத்தை அரவணைக்கும் போது, அதை பரிவு என்று நாம் கூறுகிறோம்; இந்த குணம் இரக்கம் அல்ல; மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கும் போது சந்தோஷமடைந்தும், பிறர் வருந்தும் போது, தானும் துன்பமடைவதுமாக இருக்கும் அனுதாப குணமாகும்.
மனம், வாக்கு, காயம் ( உடல்) என்ற மூன்றையும்
இறை ஆராதனைக்குப் பயன்படுத்துவதே பக்தி- பாபா