azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 22 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 22 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Ask the Lord for the removal of your earthly troubles; there is no mistake in that. It is much better than asking other men or women, and losing self-respect and honour. For the sake of votes, people catch hold of the feet of all and sundry; if they fall at the feet of the Lord, that will bring them more votes, for the people will plead with Him to be led by a servant of the Lord. You can call Me on the phone, but I will not be available for all those who do not have the sincere and steady yearning for the Lord. For those who say "No! You are not my Lord," I say "No." For those who say, "Yes," I too echo "Yes." If I am available in your heart, I will be available over the phone. But remember, I have My own special postal and telephone systems. They operate from the heart, straight to the heart. There are rules and regulations for the operation of that system, which the scriptures declare. You can find them there. (Divine Discourse, Jul 29, 1964)
THE SPIRITUAL PATH IS THE PATH OF DETACHMENT, OF SENSE CONTROL,
OF RIGOROUS MIND TRAINING. - BABA
உங்களது உலகியலான கஷ்டங்களைத் தீர்த்து வைக்குமாறு இறைவனைக் கேளுங்கள்; அதில் எந்தத் தவறும் இல்லை. சுய மரியாதை மற்றும் கௌரவத்தை இழந்து, பிற ஆண்கள் அல்லது பெண்களைக் கேட்பதை விட, இது எவ்வளவோ மேல். ஓட்டுகளுக்காக, மனிதர்கள் எல்லோருடைய கால்களிலும் விழுகிறார்கள்; அவர்கள் மட்டும் இறைவனது பாதங்களில் விழுந்தால், அது அவர்களுக்கு மேலும் அதிக ஓட்டுக்களைப் பெற்றுத் தரும்; ஏனெனில், மக்கள் இறைவனது ஒரு சேவகனால் தாங்கள் நடத்தப் பட வேண்டும் என இறைவனை இறைஞ்சுவார்கள். நீங்கள் என்னைப் போனில் கூப்பிட முடியும்; ஆனால், இறைவனுக்காக ஆத்மார்த்தமான மற்றும் நிலையான ஏங்குதல் அற்றவர்களுக்கு நான் கிடைக்க மாட்டேன். ‘’ இல்லை ! நீங்கள் எங்கள் கடவுள் இல்லை ‘’ என்று கூறுபவர்களுக்கு நானும் ‘’ இல்லை ‘’ என்றே கூறுவேன். ’’ ஆமாம் ‘’என்று கூறுபவர்களுக்கு , நானும் , ‘’ ஆமாம் ‘’ என்று எதிரொலிப்பேன். நான் உங்கள் இதயத்தில் குடி கொண்டிருந்தால், நான் உங்களுக்கு போனில் கிடைப்பேன். ஆனால், எனக்கு என்று ஒரு ப்ரத்யேகமான தபால் மற்றும் டெலிஃபோன் அமைப்புகள் உள்ளன என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அவை இதயத்திலிருந்து, நேராக இதயத்துடன் இயங்குபவை. இந்த அமைப்பிற்கு என்று வேதங்கள் பறை சாற்றியுள்ள விதிமுறைகள் உள்ளன. நீங்கள் அவற்றை அங்கு காணலாம்.
ஆன்மீகப் பாதை என்பது,பற்றின்மை, புலனடக்கம்
மற்றும் தீவிர மனப்பயிற்சியின் பாதையாகும் - பாபா