azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 21 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 21 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

The Lord’s name has much efficacy. By repeating the Lord’s name, His attributes can be easily recalled. Sanctify your tongue by the repetition of His name. It must also use sweet expressions which will spread contentment and joy. Be very careful about your speech. Animals have horns, insects have stings, beasts have claws and fangs, but your biggest weapon of offence is your tongue. The wounds that your tongue inflicts can scarcely be healed; they fester in the heart for long. They are capable of more damage than even an atom bomb. Speak so that your language is as sweet as your feelings are. Make the words true and pleasing (Satyam bruyat; priyam bruyat). But for the sake of pleasing another, do not speak falsehood or exaggerate. Cynicism which leads you to speak about a thing in a carping manner to bring it disrepute is as bad as flattery which makes you exaggerate and cross the boundaries of truth. (Divine Discourse, Jul 29, 1964)
SOFT, SWEET AND TRUTHFUL SPEECH IS THE EXPRESSION OF GENUINE LOVE. - BABA
இறைவனது திருநாமம் மிகவும் செயல் திறன் கொண்டது.இறைவனது திருநாமஸ்மரணை செய்வதன் மூலம், அவனது குணாதிசியங்களை எளிதாக நினைவு கூற முடியும். அவனது திருநாம உச்சாடனத்தின் மூலம், உங்களது நாவை புனிதமாக்கிக் கொள்ளுங்கள். திருப்தியையும்,சந்தோஷத்தையும் பரப்ப வல்ல இனிமையான பேச்சுக்களையும் அது உபயோகப்படுத்த வேண்டும். உங்களது பேச்சில் கவனமாக இருங்கள்.மிருகங்களுக்கு கொம்புகளும், பூச்சிகளுக்கு கொடுக்குகளும், வன விலங்குகளுக்கு நகங்களும், கோரைப்பற்களும் இருப்பதைப் போல, உங்களது மிகப் பெரிய தாக்கும் ஆயுதம் நாக்கே. உங்களது நாக்கு ஏற்படுத்தும் காயங்கள் எளிதில் ஆறுவதில்லை; அவை இதயத்தை பல காலம் பீடித்து இருக்கும்.அவை அணு ஆயுதத்தை விடவே அதிக அழிவை ஏற்படுத்த வல்லவை. உங்களது உணர்ச்சிகள் எவ்வளவு இனிமையானவையோ, அவ்வளவு இனிமை கொண்ட மொழியில் பேசுங்கள். வார்த்தைகளை உண்மையானதாகவும், பிரியமானதாகவும் ஆக்குங்கள் ( சத்யம் ப்ரூயாத்; ப்ரியம் ப்ரூயாத் ). ஆனால், மற்றவரை திருப்திப் படுத்துவதற்காக பொய்மையையோ அல்லது மிகைப்படுத்தியோ பேசாதீர்கள். ஒரு பொருளைப் பற்றி, அதற்கு இழிவு ஏற்படுத்தும் முறையில் கடுமையாகப் பேச உங்களை இட்டுச் செல்லும் விட்டேத்தித் தனம், மிகைப் படுத்தி, சத்யத்தின் வரையறைகளை மீறுமாறு உங்களை செய்ய வைக்கும் புகழ்ச்சியைப் போன்று, அதே அளவு தீமையானதே.
இதமான, இனிமையான , வாய்மையான பேச்சே,
உண்மையான ப்ரேமையின் வெளிப்பாடாகும் - பாபா