azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 20 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 20 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
The divine name saves and liberates! It is the armour against the onslaughts of pride and self-pity. When you start pious repetition of a holy name or sacred formula in a systematic manner and fix your inner eye on the form that illustrates the name, you will meet with many obstacles, disquieting thoughts, and enticements. They should be ignored, bypassed and treated lightly. Strengthen your habits, stick to your discipline, and improve your inner administration. Mix more in the company of the good and the godly. The unruly bull has to be roped and tamed, its nose bored and ringed; it has to be yoked and trained to drag heavy loads and become the docile servant of its master. Some people condemn the six passions as dire enemies and advise you to eject them outright. But I would advise you to keep them with you as docile servants, and redirect them to be useful for your noble purposes. (Divine Discourse, Nov 21, 1962)
VIRTUOUS CONDUCT ALSO ENSURES MENTAL PEACE AND THAT IN TURN SAVES YOU FROM
MANY A PHYSICAL AND MENTAL ILLNESS. - BABA
இறைவனது திருநாமம் காத்து, மோக்ஷமளிக்கிறது ! தற்பெருமை மற்றும் சுயபச்சாதாபத்தின் தாக்குதல்களுக்கு எதிரான கவசமும் அதுவே. ஒரு புனித நாமஸ்மரணை அல்லது முறையான ஒரு புனித மந்திர உச்சாடனத்தை, நீங்கள் பக்தி சிரத்தையுடன் தொடங்கி, அந்தத் திரு நாமம் எடுத்துக் காட்டும் ரூபத்தில் உங்கள் அகக் கண்ணை நிலை நிறுத்தும் போது, நீங்கள், பல தடைகள், குழப்பமான சிந்தனைகள் மற்றும் கவர்ச்சிகளை எதிர் கொள்வீர்கள். அவை உதாசீனப்படுத்தப் பட்டு, தவிர்க்கப்பட்டு, சாதாரணமாக கையாளப்பட வேண்டும். உங்களது பழக்கங்களை வலிமைப்படுத்தி, உங்களது கட்டுப்பாட்டைப் பற்றி ஒழுகி, உங்களது அகத்தின் நிர்வாகத்தை மேம்படுத்துங்கள். நல்லோர் மற்றும் இறை பக்தர்களின் நட்பு வட்டத்தில் அதிகமாகப் பழகுங்கள். முரட்டுக் காளையைக் கயிறால் கட்டி, அடக்கி, மூக்கில் துளையிட்டு, வளையத்தை மாட்ட வேண்டும் ; அது வண்டியில் பூட்டப் பட்டு, பளுவான சுமைகளை இழுத்துச் செல்லப் பழக்கப் படுத்தப் பட்டு, எஜமானனின் சாதுவான வேலைக்காரனாக ஆக்கப் பட வேண்டும். சிலர் ,ஆறு தீவிர உணர்ச்சிகளை ( காம, க்ரோத, லோப, மோஹ, மத, மாத்ஸர்யங்கள்) கொடிய எதிரிகளாகக் கண்டனம் செய்து அவற்றை நீங்கள் முழுமையாகத் தூக்கி எறிந்து விட வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள். ஆனால், நீங்கள் அவற்றை உங்களுடன் சாதுவான வேலைக்காரர்களாக வைத்துக் கொண்டு, உங்களது சீரிய நோக்கங்களுக்குப் பயன் படும் வகையில் அவற்றை திசை திருப்பிச் செலுத்துங்கள் என அறிவுறுத்துவேன்.
நல்லொழுக்கமான நடத்தை மனச்சாந்தியையும் உறுதி செய்கிறது ; அது பதிலுக்கு,உங்களை பல உடல் மற்றும் மன நோய்களிலிருந்து காக்கிறது - பாபா