azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 11 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 11 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Young men and women of present times are ready to listen to a thousand lies, but do not have the patience to pay heed to a single truth. Always remember, one honest person who speaks with love is better than a hundred flatterers. Young people should also not underestimate the value of good health and the strength they enjoy during their years of youth. You should use it to learn and lead purposeful and unselfish lives, and maintain good health instead of dissipating all your energies and talents in the pursuit of sensuous objects and evil desires. An evil-minded person in a village is more harmful to the community than even a polluted pond! Always remember, to secure the grace of God one must adhere to right conduct and observe purity in thought, word and deed. Kindness and compassion are the hallmark of a true human being. (Divine Discourse, Feb 9,1984)
THE WORLD'S PEACE, PROSPERITY OR OTHERWISE IS DEPENDENT ON
THE CHARACTER OF ITS YOUTHFUL MEN AND WOMEN. - BABA
தற்கால இளைஞர்களும்,இளம் பெண்களும், ஒரு ஆயிரம் பொய்களைக் கேட்கத் தயாராக இருக்கிறார்கள்; ஆனால், ஒரு உண்மையைக் கேட்பதற்கான பொறுமை அவர்களிடம் இல்லை.ப்ரேமையுடன் பேசும் ஒரு நேர்மையான மனிதர் , நூறு புகழ்பவர்களை விடச் சிறந்தவர் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். இளைஞர்களும் கூட, நல்ல ஆரோக்யம் மற்றும் அவர்களது இளமைக் காலத்தில் அவர்கள் அனுபவிக்கும் சக்தியின் மதிப்பு ஆகியவற்றை குறைத்து எடை போடக் கூடாது. நீங்கள் அதை, கற்றுக் கொள்வதற்கும், அர்த்தமுள்ள மற்றும் தன்னலமற்ற வாழ்க்கையை நடத்துவதற்கும் பயன்படுத்த வேண்டும்; உங்கள் அனைத்து சக்திகள் மற்றும் திறமைகளை புலனின்பங்கள் மற்றும் தீய ஆசைகளில் வீணடிப்பதற்கு பதிலாக, நல்ல ஆரோக்யத்தைப் பராமரிக்கப் பயன்படுத்த வேண்டும். ஒரு மாசடைந்த குளத்தை விட, கிராமத்தில் உள்ள ஒரு கொடிய மனம் கொண்ட ஒரு மனிதன் சமுதாயத்திற்கு அதிகம் தீங்கு விளைவிப்பான் ! இறை அருளைப் பெறுவதற்கு ஒருவர், தர்மத்தைப் பற்றி ஒழுகுவதோடு, சிந்தனை , சொல் மற்றும் செயலில் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். கனிவும், பரிவுமே ஒரு உண்மையான மனிதனின் அடையாளச் சின்னங்களாகும்.
உலகின் சாந்தி மற்றும் வளமை இருப்பதோ அல்லது இல்லாமல் இருப்பதோ, அதன், இளம் ஆண்கள் மற்றும் இளம் பெண்டிரின் குணநலன்களைச் சார்ந்தே இருக்கும்- பாபா