azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 10 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 10 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Propagation of dharma does not mean spreading knowledge about something that is not known. Its basic purpose is to promote the practice of dharma. Only those who practice dharma are qualified to propagate it. It is because dharma and satya (righteousness and truth) have not been propagated by persons practising them that they have been eclipsed, as it were, and are not perceivable. It is only when they are practised in daily life that their true nature and value will be realised. A person is judged by the nature of one’s actions. If one’s actions are good, one is described as a good person. If his actions are bad, the person is described as being wicked. One's qualities and actions are interdependent. Actions reveal qualities and qualities determine actions. Hence everyone should strive to reform oneself by developing good qualities. (Divine Discourse, Jan 7, 1988.)
YOUR VISION WILL BECOME SANCTIFIED ONLY WHEN YOU DEVELOP
THE FEELING THAT ALL ARE THE EMBODIMENTS OF GOD - BABA
தர்மத்தைப் பரப்புவது என்றால், இதுவரை தெரியாத ஏதோ ஒன்றைப் பற்றிய ஞானத்தைப் பரப்புவது என்று பொருள் அல்ல. அதன் அடிப்படை நோக்கம், தர்மத்தைக் கடைப்பிடிப்பதை வளர்ப்பதே ஆகும்.தர்மத்தைக் கடைப் பிடிப்பவர்களுக்கு மட்டுமே, தர்மத்தைப் பரப்புவதற்கான தகுதி இருக்கிறது. சத்தியமும், தர்மமும்,அதைப் பற்றி ஒழுகுபவர்களால் , பரப்படாததால் தான், அவை மறைந்து, கண்களுக்குத் தெரியாமல் இருப்பதைப் போலத் தோன்றுகின்றன. அவற்றை, தினசரி வாழ்க்கையில் கடைப்பிடித்தால் மட்டும் தான், அவற்றின் உண்மையான இயல்பும், மதிப்பும் உணரப்படும். ஒரு மனிதன், அவனது செயல்களின் தன்மையைப் பொறுத்தே, கணிக்கப் படுகிறான். ஒருவரது செயல்கள் நல்லதாக இருந்தால், அவன் நல்லவன் எனப் படுகிறான். அவனது செயல்கள் தீயவையாக இருந்தால், அவன் கெட்டவன் எனப் படுகிறான். ஒருவரது குணங்களும், செயல்களும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. செயல்கள், குணங்களை வெளிப்படுத்துகின்றன; குணங்கள், செயல்களை தீர்மானிக்கின்றன. எனவே, ஒவ்வொருவரும், நல்ல குணங்களை வளர்த்துக் கொள்வதன் மூலம், தன்னையே சீர்படுத்திக் கொள்ளப் பாடுபட வேண்டும்.
அனைவரும் ஆண்டவனது திருவுருவங்களே என்ற உணர்வை நீங்கள் வளர்த்துக் கொண்டால் மட்டுமே, உங்களது பார்வை புனிதமானதாக ஆகும் - பாபா