azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 09 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 09 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Ponder on a river merging in the ocean. The waters of the ocean rise up as vapour when warmed by the Sun and form clouds, which come down as drops of rain. Each drop has inside it the yearning to return to the ocean from which it has been exiled. But, the feeling of individuality overcomes the yearning. The raindrops accumulate and flow as brooks and streams which swell into tributaries of rivers, flooding the plains. At last, the river merges into the ocean and loses its name, form and attributes. In spite of all modifications undergone in the journey from ocean to ocean, water remains as water in vapour, cloud, rain and river. Names, forms and qualities do change but the core remains unchanged. Man too emerges from the ocean of Divinity and his destiny is to merge in it. This is the Truth. This is the Reality. That Thou Art. Be firm in that faith. (Divine Discourse, Jan 2, 1987)
TRUE SPIRITUALITY CONSISTS IN PROMOTING HUMAN UNITY THROUGH HARMONIOUS LIVING AND SHARING THE JOY WITH ONE AND ALL. - BABA
ஒரு நதி கடலுடன் கலப்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.கடலின் நீர், சூரியனால் உஷ்ணப் படுத்தப் பட்டு ஆவியாக மேலெழுந்து,மேகங்களாக உருவாகி, அவை மழைத் துளிகளாக கீழே விழுகின்றன. ஒவ்வொரு துளிக்குள்ளும், தான் வெளியேற்றப் பட்ட கடலுக்குத் திரும்பி வரவேண்டும் என்ற ஏக்கம் இருக்கிறது. ஆனால்,தனித் தன்மை உணர்வு, இந்த ஏக்கத்தை வென்று விடுகிறது. மழைத் துளிகள் ஒன்று சேர்ந்து, சிறு ஓடை மற்றும் நீரோடைகளாக ஓடி,பின்னர் பெருக்கெடுத்து ஓடும் கிளை நதிகளாக சம வெளிகளில் வெள்ளமாகப் பாய்கின்றன. இறுதியில், நதி, கடலுடன் கலந்து, தனது நாம, ரூப, குணங்களை இழந்து விடுகிறது. தனது, கடலிலிருந்து புறப்பட்டு கடலுக்கு வந்தடைந்த பயணத்தின் போது, ஆவி, மேகம், மழை மற்றும் நதி என்ற அனைத்து மாற்றங்களை அனுபவித்த போதிலும், தண்ணீர்,தண்ணீராகவே இருக்கிறது. நாமங்கள், ரூபங்கள் மற்றும் குணங்கள் மாற்றம் அடைந்தாலும் உட்கரு மாறாமல் இருக்கிறது. மனிதனும் கூட, தெய்வீகம் என்ற கடலிலிருந்தே வெளிப்பட்டவன்; அவனது இறுதி நிலை அதனுடன் ஒன்றரக் கலப்பதே. இதுவே சத்தியம்;இதுவே உண்மை நிலை. நீ அதுவே. இந்த நம்பிக்கையில் உறுதியாக இருங்கள்.
உண்மையான ஆன்மீகம் என்பது, இசைவான வாழ்க்கை நடத்தி, எல்லோருடனும் ஆனந்தத்தைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், மனித குல ஒற்றுமையை அபிவிருத்தி செய்வதில் தான் இருக்கிறது - பாபா