azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 01 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 01 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Faith and devotion are the prerequisites for peace. Have faith in the ocean, not the wave; believe in the Lord, not in little things. But the tragedy is, you put your trust in little people, in wicked people, in those who you know are vicious and greedy; but you hesitate when asked to put your faith in the Lord, who is more merciful than any father, more loving than any mother, more powerful than any earthly authority, and more considerate than any kinsman. You do not doubt each other; but, you develop doubt regarding God. Doubt is easy, faith is difficult. Dwell on the Divine Name and its sweetness will saturate your tongue and improve your taste. Do not count the number of times you have repeated it. For, whom are you going to impress with the number? The Lord will respond even if you call Him just once from the depths of feeling. (Divine Discourse, Dec 17, 1964)
THE BODY WILL SHINE IF THE CHARACTER IS FINE. SERVICE OF MAN AND
WORSHIP OF GOD WILL PRESERVE ITS CHARM. - BABA
இறை நம்பிக்கையும்,பக்தியும், சாந்திக்கான முன் முதல் தேவைகளாகும். அலையின் மீது இன்றி,கடலின் மீது நம்பிக்கை வையுங்கள்; அற்பப் பொருட்களின் மீது அல்லாது,ஆண்டவன் மீது நம்பிக்கை வையுங்கள். ஆனால், துக்கப் பட வேண்டிய விஷயம் என்னவென்றால், நீங்கள், அற்பமானவர்கள், தீயவர்கள், கொடூரம் மற்றும் பேராசை கொண்டவர்கள் என நீங்களே கருதுபவர்கள் ஆகியோரின் மீது , உங்கள் நம்பிக்கையை வைக்கிறீர்கள்; ஆனால்,எந்தத் தந்தையையும் விட அதிகக் கருணை கொண்டவனும்,எந்தத் தாயையும் விட அதிகம் நேசிப்பவனும், உலகின் எந்த அதிகாரியையும் விட அதிக வல்லமை படைத்தவனும், எந்த உறவினரையும் விட அதிக பரிவு கொண்டவனும் ஆன ,இறைவன் மீது நம்பிக்கை வைக்கச் சொல்லும் போது, நீங்கள் தயங்குகிறீர்கள். நீங்கள் ஒருவரை ஒருவர் சந்தேகிப்பதில்லை; ஆனால் இறைவனைப் பற்றி சந்தேகத்தை வளர்த்துக் கொள்கிறீர்கள். சந்தேகப்படுவது எளிது; நம்பிக்கை வைப்பது கடினமானது. இறை நாமத்தை தியானியுங்கள்; அதன் இனிமை உங்கள் நாவில் திளைத்து, உங்களது சுவையை மேம்படுத்தி விடும். நீங்கள் எத்தனை முறை அதைத் திருப்பிச் சொன்னீர்கள் என்பதைக் கணக்கிடாதீர்கள். ஏனெனில், அந்தக் கணக்கைக் கொண்டு நீங்கள் யாரைக் கவரப் போகிறீர்கள் ? உங்கள் உணர்வின் ஆழத்திலிருந்து, அவனை ஒரே ஒரு முறை அழைத்தாலும் கூட, இறைவன் இற(ர)ங்கி வருவான்.
குணநலன்கள் சிறப்பாக இருந்தால், உடலும் ஓளி விட்டுத் திகழும். மனித சேவையும், மாதவ வழிபாடும் அதன் வசீகரத்தைப் பேணிக் காக்கும். -பாபா