azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 26 Feb 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 26 Feb 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Whatever happens, never give up the virtuous path. When Hanuman saw Mother Sita in the Ashoka Vana at Lanka, he saw her forlorn and helpless in the midst of her captors, surrounded by ogresses. He experienced overpowering agony seeing her, and so proposed to her, "Mother, I cannot bear your suffering. I shall take you on my shoulder, leaping across the sea, and restore you to Lord Rama". But listen to Mother Sita’s response! Despite untenable suffering, she resisted temptation to escape from captivity and reunite with her Lord. She stuck to Dharma and explained, "I should not, out of my own will, touch any male other than my Lord. If you carry me now, you will perform the same act for which Ravana is condemned. It will detract the glory that awaits my Lord, who will certainly liberate me by the prowess of His arm." End results can never justify the means. Means are just as important as the goal; both must be noble! (Divine Discourse, Mar 31, 1965)
OFFER YOUR VIRTUES AS FLOWERS TO THE LORD;
VIRTUES THAT SPREAD BEAUTY AND FRAGRANCE. - BABA
எது நடந்தாலும்,நல்லொழுக்கத்தின் பாதையை ஒருபோதும் கை விடாதீர்கள். ஹனுமான் சீதா மாதாவை இலங்கையின் அசோக வனத்தில் கண்டபோது, அவள், அரக்கியர்களில் சூழப்பட்டு, தன்னைச் சிறைப் பிடித்தவர்களுக்கு நடுவில், துக்கமாகவும், ஆதரவற்றும் இருப்பதைப் பார்த்தார். அவளை அவ்வாறு பார்த்ததில், அவர் பெரும் வேதனை அடைந்து, ‘’ தாயே ! உங்களது துக்கத்தை என்னால் தாங்க முடியவில்லை. உங்களை என் தோள்களில் சுமந்து கொண்டு, கடலைக் கடந்து, பகவான் ஸ்ரீராமரிடன் உங்களைத் திரும்பச் சேர்த்து விடுகிறேன் ‘’ என்று அவரிடம் கூறினார். ஆனால், சீதா மாதாவின் பதிலைப் பாருங்கள் ! தாங்க முடியாத துயரத்திலும் கூட,சிறையிலிருந்து தப்பி, தனது நாதனுடன் திரும்பச் சேர முடியும் என்ற தூண்டுதலை அவள் எதிர்த்தாள். அவள் தனது தர்மத்தைப் பற்றி ஒழுகி, ‘’ நான், எனது சொந்த விருப்பத்துடன், எனது நாதனைத் தவிர மற்ற எந்த ஆணையும், தொடக்கூடாது. நீ இப்போது என்னைச் சுமந்து சென்றால், எந்தச் செயலுக்காக ராவணன் கண்டனத்துக்கு ஆளாகிறானோ, அதே செயலை நீயும் செய்வதாக ஆகும். தனது கரங்களின் வலிமையால் என்னை கண்டிப்பாக மீட்கப் போகும், எனது பகவானுக்காகக் காத்திருக்கும் புகழை அது தடுத்து விடும்.’’ என விளக்கினார். இறுதி விளைவுகள், ஒருபோதும், அதை அடைவதற்கான வழிகளை நியாயப் படுத்த முடியாது. வழி முறைகளும், குறிக்கோளைப் போலவே அதே அளவு முக்கியமானதாகும்; இரண்டுமே சீரியவையாக இருக்க வேண்டும் !
எங்கும் சுந்தரத்தையும், சுகந்ததையும் பரப்பும் உங்களது நற்குணங்களை-, மலர்களாக இறைவனுக்கு அர்ப்பணியுங்கள். - பாபா