azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 24 Feb 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 24 Feb 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Be good, be serviceable, be useful, be kind, be God-fearing — then the confidence of the people will be yours. Faith is the very breath of victory — faith in oneself, faith in the good work one has set upon, and faith in its success despite signs of failure. Attachment and hatred are the greatest enemies of progress in any work. If someone is deluded into believing that they are saving others, then woe be to them, for there is no ‘other’ at all! The fundamental flaw here is ignorance! If only you are wise, you will know that all individuals are waves on the surface of the self-same ocean. All are One, injury to the hand is pain to the whole body. Hence, selfless action is the ideal to be practised! Perform all actions without selfish desire (Nishkama Karma)! Desire for gain is like the poison fangs; when they are pulled out, the snake of karma is rendered harmless. (Divine Discourse, Sep 15, 1963)
TEST ALL YOUR ACTIONS, WORDS, THOUGHTS ON THIS TOUCHSTONE:
“WILL THIS BE APPROVED BY GOD? WILL THIS REBOUND TO HIS RENOWN?- BABA
நல்லவராக,சேவை ஆற்றுபவராக,பயனுள்ளவராக, கனிவானவராக, கடவுள் நம்பிக்கை கொண்டவராக இருங்கள்- பின்னர் மக்களின் நம்பிக்கை உங்களுடையதே. தன் மீதே நம்பிக்கை, தான் செய்ய விழைந்த நற்பணியின் மீது நம்பிக்கை, தோல்வியின் அறிகுறிகள் தோன்றினாலும் அதன் வெற்றியின் மீது நம்பிக்கை – இப்படிப் பட்ட நம்பிக்கையே, வெற்றியின் உயிர்மூச்சாகும். விருப்பு, வெறுப்புக்களே, எந்தப் பணியின் முன்னேற்றத்திற்கும் மிகப் பெரிய எதிரிகளாகும். தாங்கள் தான் பிறரைக் காப்பாற்றுகிறோம் என்ற மாயையில் ஒருவர் இருந்தால், அவர்கள் ‘’ ஐயோ, பாவம் ‘’ ஆனவர்களே; ஏனெனில் பிறர் என்று எவருமே இல்லை ! இங்கு அடிப்படைக் குறை, அறியாமையே ! நீங்கள் மட்டும் ஞானம் பெற்றவராக இருந்தால்,அனைவரும், ஒரே கடலின் பரப்பில் தோன்றும் அலைகளே என்பதை அறிந்திருப்பீர்கள். அனைவரும் ஒன்றே; கையில் ஏற்படும் காயம் உடலனைத்திற்கும் வலியைத் தருகிறது. எனவே, தன்னலமற்ற சேவை என்ற கோட்பாட்டையே கடைப்பிடிக்க வேண்டும் ! அனைத்து செயல்களையும் சுய ஆசையின்றி ( நிஷ்காம கர்மம் ) ஆற்றுங்கள். லாபத்தின் மீதான ஆசை, விஷப் பற்களைப் போன்றது; அவற்றைப் பிடுங்கி விட்டால், கர்மா எனும் பாம்பு தீங்கற்றதாகி விடும்.
உங்களது அனைத்து செயல்கள், சொற்கள் மற்றும் சிந்தனைகளை, ‘’இது இறைவனால் ஏற்றுக் கொள்ளத்தக்கதா? இது அவனது கீர்த்திக்கு உகந்ததா?’’ என்ற உரைகல்லில் சோதித்துப் பாருங்கள். - பாபா