azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 16 Feb 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 16 Feb 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Do not yield to despair. Even the infant lotus buds bloom in their own good time. By the cumulative effect of the good done in many previous births, you have secured this fortune; you do not know how much you have gone through, but I know! And, whether you know or not, I shall certainly satisfy all your needs. You must take in the medicine I give and also follow the diet I prescribe and avoid the things I prohibit. Take the Form you like and meditate upon it, take the Name you love and repeat it, then no evil thought will arise. Wicked thoughts will flee. When they have fled, what remains is the Embodiment of Atma (Atmaswarupa). Lead your lives according to My Teachings, without the slightest modification. First have faith, then the experience is granted. You worship with faith and you will experience Grace. Faith results in Grace without your being aware of it. → Divine Discourse, Oct 25, 1961
EVERY LIVING BEING IN THIS WORLD IS KNOWINGLY OR
UNKNOWINGLY ON A SPIRITUAL PILGRIMAGE. - BABA
மனச்சோர்வுக்கு இடமளிக்காதீர்கள்.இளைய தாமரை மொட்டுக்கள் கூட அவைகளின் குறிப்பிட்ட காலத்தில் தான் மலருகின்றன. முந்தைய பல பிறவிகளில் ஈட்டிய புண்ணியத்தின் ஒட்டு மொத்த பலனாக, நீங்கள் இந்த அதிர்ஷ்டத்தைப் பெற்றுள்ளீர்கள்; நீங்கள் எந்த அளவு அனுபவித்தீர்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள், ஆனால் நான் அறிவேன் ! மேலும் உங்களுக்குத் தெரியுமோ , தெரியாதோ, நான் உங்களது அனைத்து தேவைகளையும் கண்டிப்பாகப் பூர்த்தி செய்வேன். நீங்கள் நான் தரும் மருந்தை உட்கொண்டு, மேலும் நான் பரிந்துரைக்கும் பத்தியத்தையும் கடைப்பிடித்து, நான் தடை செய்யுள்ளவற்றைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்குப் பிடித்த இறைவனது ரூபத்தை எடுத்துக் கொண்டு தியானியுங்கள்; உங்களுக்குப் பிரியமான இறை நாமத்தை எடுத்துக் கொண்டு ஜபம் செய்யுங்கள்; பின்னர் எந்த தீய சிந்தனையும் எழ மாட்டா. தீய எண்ணங்கள் பறந்தோடி விடும். அவை பறந்து சென்ற பின் மீதி இருப்பது திவ்யாத்ம ஸ்வரூபமே. எந்த சிறிய மாற்றமும் செய்யாது, உங்களது வாழ்க்கைகளை எனது போதனைகளின் படி நடத்திச் செல்லுங்கள். முதலில் நம்பிக்கை வையுங்கள்; பின்னர் அனுபவம் அளிக்கப் படும். விசுவாசத்துடன் வழிபடுங்கள்; நீங்கள் இறை அருளை அனுபவிப்பீர்கள். விசுவாசம் என்பது இறை அருளை, நீங்கள் அறியாமலேயே பெற்றுத் தருகிறது.
இந்த உலகின் ஒவ்வொரு ஜீவ ராசியும், அறிந்தோ, அறியாமலோ
ஒரு ஆன்மீக தீர்த்த யாத்திரையில் தான் இருக்கிறது.