azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 15 Feb 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 15 Feb 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
In one of the jails, there was once a very pure soul devoted to spiritual ideals who was carefully practising spiritual discipline. He had advanced very far in meditation and concentration. However, one day when he sat for meditation, he felt very savage emotions surging up in him and was shocked to find that he could not, in spite of tremendous struggle, suppress the hateful and murderous thoughts that took hold of him. He was rocked in agony, and his guru was also upset at the turn of events. The guru probed into the history of the disciple rather deeply but could not find any valid reason for the tragedy. At last, he found that a certain fanatic murderer had acted as the cook in the jail kitchen the day previous to the calamity, and his hateful thoughts had pervaded the food he cooked. Subtle invisible thought-forms can pass from one person to another by such means. → Divine Discourse, Oct 10, 1961
YOUR LIFE MUST BE BASED ON THE PRINCIPLE OF SURRENDER TO THE DIVINE. - BABA
சிறைச் சாலைகளில் ஒன்றில், ஒருசமயம்,ஆன்மீக இலட்சியங்களைப் பின்பற்றும் ஒரு பரிசுத்தமான ஆத்மா, மிகவும் கவனமாக தனது ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். அவர் தியானம் மற்றும் மனக்குவிப்பில் மிகுந்த முன்னேற்றம் பெற்றிருந்தார். ஆனால், ஒரு நாள் அவர் தியானத்தில் அமர்ந்த போது, மிகவும் கொடூரமான உணர்வுகள் அவருள் பீறிட்டு எழுவதை உணர்ந்தார்;அவர் எவ்வளவு முயன்றாலும், அவரை ஆக்ரமித்த வெறுப்பு மற்றும் கொலைகாரத்தனமான சிந்தனைகளை அவரால் கட்டுப் படுத்த முடியாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் வேதனையால் துடித்தார்; அவரது குருவும் கூட நிகழ்வுகள் திசை மாறியதைக் கண்டு மனமுடைந்து போனார். குரு, தனது சீடரின் கடந்த காலத்தை ஆழ்ந்து ஆராய்ந்த போதும், இந்த துக்க நிலைக்கான எந்த சரியான காரணத்தையும் கண்டு பிடிக்க முடியவில்லை. இறுதியில்,இந்த பேரிடர் நிகழ்ந்த நாளைக்கு முன் தினம் , ஒரு குறிப்பிட்ட கொலைகார வெறியர், சிறையில் சமையல்காரராக பணியாற்றியுள்ளார் என்பதும் அவரது வெறுப்பு நிறைந்த சிந்தனைகள் அவர் சமைத்த உணவில் ஊடுருவி விட்டன என்பதும் தெரிய வந்தன. கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய சிந்தனை வடிவங்கள் இப்படிப் பட்ட வழிகளில், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு செல்ல முடியும்.
உங்களது வாழ்க்கை, தெய்வத்திடன் பரிபூரண சரணாகதி என்ற கோட்பாட்டை ஆதாரமாகக் கொண்டு இருக்க வேண்டும் - பாபா