azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 13 Feb 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 13 Feb 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Virtuous conduct also ensures mental peace, and that in turn saves you from many a physical and mental illness. If you overstep the bounds (mithi), you will not progress (gathi). Coming to the topic of physical illness, I must tell you that you must practice moderation in food, drink, sleep and exercise. Good food taken in moderate quantities, at regular intervals — that is the prescription. Pure, wholesome (satwic) food promotes self-control and intelligence more than passion-producing (rajasic) and impure (tamasic) food. For spiritual aspirants, pure and wholesome food is very necessary. Subtle invisible thought-forms can pass from one person to another through food. Hence you must be very careful about food, especially where you are proceeding Godward, through the steep path of yoga. Sleep too should be regulated and moderate; it is as important as work and food. Remember also that dress is primarily for protection against heat and cold, not for vain display even at the cost of health. (Divine Discourse, Oct 10, 1961)
TRY TO CONDUCT YOURSELF IN SUCH A MANNER AS NOT TO INJURE OTHERS. - BABA
நல்லொழுக்கமான நடத்தை ,மனச் சாந்தியை உறுதி செய்து, அது பதிலுக்கு, உங்களை பல உடல் மற்றும் மன நோய்களிலிருந்து காப்பாற்றுகிறது. நீங்கள் வரம்புகளை ( மிதி ) மீறினால், நீங்கள் முன்னேற ( கதி ) முடியாது. உடல் ரீதியான நோய்களைப் பற்றிக் கூறும்போது, நீங்கள் உண்பது, குடிப்பது, உறங்குவது மற்றும் உடற்பயிற்சி ஆகியவைகளில் மிதமாக இருப்பதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் கட்டாயம் கூறுவேன். நல்ல உணவை, முறையான இடைவெளிகளில் மிதமாக உண்ண வேண்டும் என்பதே பரிந்துரையாகும். ரஜோ மற்றும் தாமஸிகமான உணவை விட, பரிசுத்தமான, ஸாத்வீகமான உணவு, சுயக்கட்டுப்பாட்டையும், புத்தியையும் அதிகம் வளர்க்கிறது. ஆன்மீக சாதகர்களுக்கு பரிசுத்தமான மற்றும் ஸாத்வீக உணவு மிகவும் அவசியம். நுண்ணிய, கண்களுக்குப் புலப்படாத சிந்தனைகள், உணவின் மூலம் ஒருவரிலிருந்து, மற்றொருவருக்கு செல்ல முடியும். குறிப்பாக, சரிவான யோகத்தின் பாதையில், நீங்கள் இறைவனை நோக்கிப் பயணிக்கும் போது, நீங்கள் உணவைப் பற்றி மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். உறக்கமும் கூட முறையாகவும் மிதமாகவும் இருக்க வேண்டும்; அதுவும் உழைப்பு மற்றும் உணவைப் போலவே முக்கியமானதாகும். ஆரோக்கியத்தையே கூட பாதிக்கக் கூடிய வீண் பகட்டிற்காக அன்றி, ஆடை என்பது முதன் முதலில் வெப்பம் மற்றும் குளிரிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்காகவே என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
பிறரை பாதிக்காத வண்ணம் நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்-பாபா