azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 12 Feb 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 12 Feb 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

When we spend so much time and effort to understand the contents of our scriptures, should we not use all that knowledge to understand and experience the Divinity in us? To merely read and then teach others without putting them into practice in your life is an useless occupation – you are wasting your time and life as well! What you really need is the grace of God. In the present times, there is too much confusion. To overcome this, handle your mind very steadily and slowly, and bring it under your control. Never be in a hurry and use force to control the mind. If a cow in our home wants to go out and eat the harvest in the field, how is it tamed and brought back? We try to find out the kind of food that it is after and feed it with something even better at home. Gradually, it gives up the tendency to go out of the house. Tame your mind similarly! (Summer Showers in Brindavan 1973, Ch 27)
COMMAND THE MIND, REGULATE YOUR CONDUCT, KEEP YOUR HEART STRAIGHT AND CLEAR,
THEN YOU WILL GET FROM THE LORD, THE GIFT OF HIS GRACE. - BABA
நம்முடைய சாஸ்திரங்களில் உள்ளவற்றைப் புரிந்து கொள்ள நாம் இவ்வளவு நேரம் மற்றும் முயற்சியைச் செலவழிக்கும் போது, அந்த அனைத்து அறிவையும், நம்முள் உள்ள தெய்வீகத்தைப் புரிந்து கொண்டு அனுபவிப்பதற்காகப் பயன்படுத்த வேண்டாமா? வெறுமனே படித்து விட்டு, அவற்றை உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்காமல், பின்னர் பிறருக்கு போதிப்பது என்பது ஒரு பயனற்ற வேலையாகும்- நீங்கள் உங்கள் நேரத்தையும், ஏன் உங்கள் வாழ்க்கையையும் கூட வீணடிக்கிறீர்கள் ! உங்களுக்கு உண்மையில் தேவை இறைவனது அருளே. தற்காலத்தில், குழப்பம் மிக அதிகமாக இருக்கிறது. இதை சமாளிப்பதற்கு, உங்கள் மனதை நிலையாகவும், மெதுவாகவும் கையாண்டு அதை உங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள். ஒருபோதும் அவசரப்பட்டு, வலுக்கட்டாயமாக மனதைக் கட்டுப் படுத்த முயலாதீர்கள். வீட்டிலிருக்கும் பசுமாடு வெளியில் சென்று வயலில் உள்ள பயிரை மேயவேண்டும் என விரும்பினால், அது அடக்கப் பட்டு எப்படி திரும்பக் கொண்டு வரப்படுகிறது? அது என்ன மாதிரியான உணவைத் தேடி அலைகிறது என்பதை நாம் கண்டு பிடிக்க முயன்று, அதை விடச் சிறந்த ஒன்றை வீட்டிலேயே அதற்கு அளிக்கிறோம். படிப்படியாக, அது வீட்டை விட்டு வெளியே போகும் இயல்பை விட்டு விடுகிறது. உங்கள் மனதை அவ்வாறே அடக்கிப் பழக்குங்கள்.
மனதைப் பணிய வைத்து,நடத்தையை ஒழுங்கு படுத்தி, இதயத்தை நேராகவும், தெளிவாகவும் வைத்துக் கொள்ளுங்கள்; பின்னர், இறைவனிடமிருந்து அவனது அருள் எனும் பரிசைப் பெறுவீர்கள் - பாபா