azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 09 Feb 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 09 Feb 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Our ancients enquired into the nature of Divinity through many paths, but were not successful in recognising the reality. Hence, they started worshipping Prakriti (Nature). Thereafter, the Bharatiyas took to murti aradhana (idol-worship). Every creature that takes birth in this universe has a form (murti). Idols are inert in nature and do not possess the qualities of compassion, love, forbearance, etc. It is for this reason that some people are against idol-worship. This is ignorance. Are you not worshipping the pictures of your parents and grandparents? Do these pictures have life in them? No. Nor do they have the qualities of compassion, love, sacrifice, etc. Then what is the point in worshipping them? It is through these pictures that we are reminded of the virtues and ideals they stood for. You use your forefinger to point to a specific object, say, a flower or a tumbler. Similarly idols are like pointers to Divinity. Once you recognise Divinity, you don’t need the pointers. Such being the case, is it not foolish to object to idol worship? (Divine Discourse, Mar 12, 2002)
TO RESURRECT LOVE AND COMPASSION, YOU MUST KILL JEALOUSY AND SELFISHNESS,
AND PURIFY YOUR HEARTS. - BABA
நமது மூதாதையர்கள், தெய்வீகத்தின் இயல்பைப் பற்றி பல வழிகளில் ஆராய்ந்தார்கள்; ஆனால், உண்மை நிலையை உணர்வதில் வெற்றி பெற முடியவில்லை. எனவே, அவர்கள் இயற்கையை (ப்ருக்ருதி) ஆராதிக்க ஆரம்பித்தார்கள். அதன் பிறகு, பாரதீயர்கள், மூர்த்தி ஆராதனையில் ( விக்ரஹ வழிபாடு) ஈடுபட்டார்கள். இந்த பிரபஞ்சத்தில் பிறக்கும் ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒரு ரூபம் ( மூர்த்தி ) உண்டு. விக்ரஹங்கள் இயற்கையில் ஜடப்பொருட்களே; அவைகளில் கருணை, ப்ரேமை, சகிப்புத் தன்மை போன்றவை இருப்பதில்லை. இந்தக் காரணத்தினால், சிலர் விக்ரஹ ஆராதனைக்கு எதிராக இருக்கிறார்கள். இது அறியாமையே. நீங்கள் உங்களது பெற்றோர்கள் மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோரின் படங்களை வழிபடுவதில்லையா? இந்த படங்களுக்கு, அவற்றில் உயிரா இருக்கிறது ? இல்லையே. அவைகளுக்கும் கருணை,ப்ரேமை, தியாகம் போன்ற குணங்களும் இருப்பதில்லையே. பின்னர், அவற்றை வழிபடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இந்தப் படங்களின் மூலம் தான் அவர்கள் பற்றி ஒழுகிய நற்குணங்களையும், இலட்சியங்களையும் நாம் நினைவு கூறுகிறோம். நீங்கள், ஒரு குறிப்பிட்ட பொருளை, உதாரணமாக ஒரு பூ, ஒரு டம்ளர் ஆகியவற்றைச் சுட்டிக் காட்ட உங்கள் ஆள்காட்டி விரலைப் பயன்படுத்துகிறீர்கள். அதைப் போலவே, விக்ரஹங்கள் தெய்வீகத்தைச் சுட்டிக் காட்டுபவை. ஒருமுறை, நீங்கள் தெய்வீகத்தை உணர்ந்து விட்டால், உங்களுக்கு இந்தச் சுட்டிக் காட்டிகள் தேவையில்லை. இப்படி இருக்கும் போது, விக்ரஹ ஆராதனையை நிந்திப்பது அறிவீனம் அல்லவா?
ப்ரேமையையும், பரிவையும் புனருத்தாரணம் செய்வதற்கு, நீங்கள் பொறாமையையும், சுயநலத்தையும் அழித்து, உங்கள் இதயங்களை பரிசுத்தமாக்கிக் கொள்ள வேண்டும் - பாபா