azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 08 Feb 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 08 Feb 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Do puja (ritual worship) with flowers, japam (repetition) with rosaries, and so on, but only until you are prepared for higher endeavours. You must offer the Lord, not the flowers that plants grow; that will reward the plant, not you! The Lord wants you to offer the lotus that blooms in the Lake of your Heart, and the fruit that ripens on the tree of your earthly career. You may ask, "Where can I find the Lord?" Well, He has given His address, in Chapter 18, Sloka 61 of the Gita. He declares, “Ishwarassarvabhoothaanam hriddese, Arjuna, tistati - O Arjuna, the Lord resides in the heart of all beings." Now, after knowing that, how can you look down on any living being in contempt or how can you revel in hating him or indulge in the pastime of ridiculing? Remember, every individual is charged with the Divine Presence, moved by Divine attributes. Love, honour, friendliness - that is what each one deserves from you. Give these freely, in full measure! (Divine Discourse, Apr 16, 1964)
OFFER YOUR VIRTUES AS FLOWERS - VIRTUES THAT SPREAD
BEAUTY AND FRAGRANCE EVERYWHERE. - BABA
உயர்நிலை ஆன்மீக சாதனைகளுக்கு நீங்கள் தயாராகும் வரை, மலர்களைக் கொண்ட பூஜை, ஜபமாலைகளை வைத்து ஜபம் ஆகியவற்றைச் செய்யுங்கள். நீங்கள் இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டியது, செடிகளில் மலர்ந்த மலர்களை அல்ல, அது செடிகளுக்கு மட்டுமே பலனைத் தரும், உங்களுக்கு அல்ல ! உங்களது இதய தடாகத்தில் மலர்ந்த தாமரை மலர்களையும், உங்களது இந்த உலக வாழ்க்கை எனும் மரத்தில் பழுத்த பழத்தையும் தான் அவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று இறைவன் விரும்புகிறான். ‘’ இறைவன் எங்கு இருக்கிறான்? ‘’ என்று நீங்கள் கேட்கக் கூடும். நல்லது, அதை அவனே ஸ்ரீமத் பகவத் கீதையின் 18 வது அத்தியாயத்தின் 61 வது ஸ்லோகத்தில் கொடுத்துள்ளான். அவன், ‘’ ஈஸ்வர ஸர்வ பூதானாம் ஹ்ருதஸ்ஸே, அர்ஜூனா, திஷ்டதி - ஓ அர்ஜூனா, இறைவன் அனைத்து ஜீவராசிகளின் இதயங்களில் வசிக்கிறான் ‘’ என்று அறிவிக்கிறான். இப்போது, இதைத் தெரிந்து கொண்ட பிறகு, நீங்கள் எப்படி, எந்த ஜீவனையும் அவமதிப்புடன் தாழ்வாக நோக்கவோ அல்லது அவரை வெறுப்பதில் திளைக்கவோ அல்லது அவரை மட்டம் தட்டுவது என்ற பொழுது போக்கில் ஈடுபடவோ செய்யலாம் ? ஒவ்வொரு தனி நபரும், தெய்வீகத்தின் இருக்கையால் சக்தி பெற்று, தெய்வீக அம்சங்களால் இயக்கப் படுபவரே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.ப்ரேமை, கண்ணியம் , நட்புணர்வு – இவையே உங்களிடமிருந்து ஒவ்வொருவருக்கும் உரித்தானதாகும். இவற்றை முழுமையாகவும், தாராளமாகவும் அளியுங்கள் !
உங்களது நற்குணங்களை- எங்கும் சுந்தரத்தையும், சுகந்ததையும் பரப்பும் நற்குணங்களை, மலர்களாக இறைவனுக்கு அர்ப்பணியுங்கள். - பாபா