azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 02 Feb 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 02 Feb 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Be good, see good, hear good, talk good and do good. The basis for such discipline is to ‘think good’. This entails controlling of the mind. Meditation on God is one of the steps for achieving steadiness of mind. Concentration is needed for every action such as even walking on the road, talking, reading, and so on. You should concentrate with single minded devotion on God. Performing work as worship is also tantamount to meditation. You must perform all actions as offering to God. Also, when you have the feeling that Divinity is within you, you will not think, see, hear, talk or do any evil. Having complete faith in the Divinity within is self-confidence. This is the foundation on which the walls of self-satisfaction have to be raised and the roof of self-sacrifice laid, so that the mansion of Self-Realisation is complete. (Divine Discourse, Jul 18, 1997)
TO RESURRECT LOVE AND COMPASSION, YOU MUST KILL JEALOUSY AND SELFISHNESS,
AND PURIFY YOUR HEARTS. - BABA
நல்லவராக இருங்கள்,நல்லதையே காணுங்கள்,நல்லவற்றையே கேளுங்கள், நல்லவற்றையே பேசுங்கள், நல்லதையே செய்யுங்கள். இப்படிப் பட்ட கட்டுப்பாட்டிற்கு அடிப்படை ‘’ நல்லதையே நினைப்பது ‘’ ஆகும். இதற்கு மனக் கட்டுப்பாடு, இன்றயமையாததாகும். மனதை நிலையாக வைத்துக் கொள்வதற்கான பல படிகளில் இறைவனை தியானிப்பது ஒரு முறையாகும். சாலையில் நடப்பது, பேசுவது, படிப்பது போன்ற ஒவ்வொரு செயலுக்கும் கூட மனக்குவிப்பு மிகவும் தேவையே. ஒரு முகமான மனக்குவிப்போடு நீங்கள் இறைவன் பால் பக்தி செலுத்த வேண்டும். ஆற்றும் செயலையே, ஆராதனையாகச் செய்வது கூட தியானத்திற்கு ஒப்பானதாகும். நீங்கள் அனைத்து செயல்களையும் இறையார்ப்பணமாகச் செய்தல் வேண்டும். மேலும்,தெய்வீகமே உங்களுள் உறைகிறது என்ற உணர்வு உங்களுக்கு இருக்குமானால், நீங்கள் தீயவையான எதையும், சிந்திக்கவோ, பார்க்கவோ, கேட்கவோ , சொல்லவோ அல்லது செய்யவோ மாட்டீர்கள். உள்ளுறையும் தெய்வீகத்தின் மீது பரிபூரண விசுவாசம் கொண்டிருப்பதே தன்னம்பிக்கையாகும். இந்த அஸ்திவாரத்தின் மீது சுய திருப்தி என்ற சுவர்களை எழுப்பி, சுயதியாகம் என்ற கூரையை வேய்ந்தால் தான், ஆத்ம சாக்ஷாத்காரம் எனும் மாளிகை முழுமை பெறும்.
ப்ரேமையையும், பரிவையும் புனருத்தாரணம் செய்வதற்கு, நீங்கள் பொறாமையையும்,சுயநலத்தையும் அழித்து, உங்கள் இதயங்களை பரிசுத்தமாக்கிக் கொள்ள வேண்டும் - பாபா