azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 27 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 27 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
God belongs to everyone and is not the sole preserve of anyone. There is only one God, He manifests Himself in many forms to please different people. Sadhana alone is not enough to understand this truth. The spirit of enquiry and discrimination is also necessary. Today, in pursuit of worldly interests and out of commercial considerations, what is essentially one is split and being regarded as many. In this process, true Divinity is lost; people fail to distinguish between what is true and what is false and are unable to grasp the true nature of the Divine. To fix this, firm faith is very essential. Be steadfast, true and pure. God's grace cannot be won if you waver from moment to moment, and if your heart is impure. God judges a devotee by the purity of the heart and not by the elaborate worship performed. If you do nothing, but just cleanse your heart, God will enter it and shine! (Divine Discourse, Oct 11, 1986)
THE BEST SPIRITUAL DISCIPLINE IS TO STRENGTHEN THE INWARD VISION. - BABA
இறைவன் ஒவ்வொருவருக்கும் சொந்தமானவனே; யாரோ ஒரே ஒருவரின் பராமரிப்பில் மட்டும் இருப்பவன் அல்ல.இறைவன் ஒருவனே; பலவிதமான மனிதர்களைத் திருப்தி செய்ய, அவன் பல ரூபங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான். இந்த சத்தியத்தைப் புரிந்து கொள்ள, ஆன்மீக சாதனை மட்டும் போதாது. விசாரணை உணர்வும், விவேகமும் கூட இதற்குத் தேவை. இன்று, உலகியலான ஆர்வங்களின் தேடல் மட்டும் வியாபார நோக்கங்களைக் கருத்தில் கொள்வதன் மூலம், அடிப்படையில் ஒன்றாக இருப்பது பிரிக்கப் பட்டு, பலவாறாகக் கருதப்படுகிறது. இந்த முறையில் உண்மையான தெய்வீகம் காணாமல் போய் விட்டது ; மனிதர்கள் எது உண்மை, எது பொய் என வேறுபடுத்தத் தவறுவதோடு, தெய்வீகத்தின் உண்மையான தன்மையைப் புரிந்து கொள்ள இயலாமல் இருக்கிறார்கள். இதை சரி செய்ய, உறுதியான தெய்வ நம்பிக்கை அத்தியாவசியமாகும். உறுதியாகவும், உண்மையாகவும், பரிசுத்தமாகவும் இருங்கள். நீங்கள் , கணத்திற்கு கணம் ஊசலாடினாலோ, உங்கள் இதயம் மாசு படிந்ததாக இருந்தாலோ, இறைவனது அருளை அடைய முடியாது. இறைவன், ஒரு பக்தனை, இதயத் தூய்மையை வைத்து மதிப்பிடுகிறானே தவிர, செய்த விரிவான வழிபாட்டை வைத்து அல்ல. நீங்கள் வேறு எதையும் செய்யாமல், வெறும் இதயத்தை மட்டும் பரிசுத்தமாக்கிக் கொள்ளுங்கள்; இறைவன் அதில் புகுந்து, பிரகாசிப்பான் !
தலைசிறந்த ஆன்மீக சாதனை:
உள்ளார்ந்த திருஷ்ட்டியை வலுப்படுத்துவதே - பாபா