azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 23 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 23 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
In Treta Yuga, Ravana's brother, Vibhishana, could not put up with the wrong deeds being done by Ravana. Opposing these actions, he tried to correct Ravana in all possible ways. But when his efforts failed and he had no alternative, he sought refuge at the feet of the embodiment of Dharma, Sri Rama. The prime offender was Ravana alone. But in the war with Rama, all the rakshasas (demons) who supported him or sided him, perished with him. They paid the penalty for their abetment of his crime. Whoever may commit an offence, whether a son, daughter, spouse, a relation or a close associate, one will be free from the taint of being accessory to the crime only if they oppose the wrong action and try to correct the offender genuinely. If on the contrary, they allow it or encourage it to be done, they will be guilty of abetment and experience the fruits of their action. - Divine Discourse, Oct 11, 1986.
YOU CAN TRANSFORM EVEN A WICKED PERSON THROUGH YOUR LOVE. - BABA
த்ரேதா யுகத்தில்,ராவணனின் சகோதரனான விபீஷணனால், ராவணன் செய்யும் தீய செயல்களை சகித்துக் கொள்ள முடியவில்லை.இந்த செயல்களை எதிர்த்த அவன், தன்னால் முடிந்த எல்லா வழிகளிலும் ராவணனைத் திருத்த முயன்றான்.ஆனால்,அவனது முயற்சிகள் தோல்வியடையவே, வேறு வழியின்றி தர்ம ஸ்வரூபனான ஸ்ரீராமரின் பாதங்களில் சரணடைந்தான். இதில் முதன்மைக் குற்றவாளி ராவணனே. ஆனால், ஸ்ரீராமருடனான யுத்தத்தில் அவனை ஆதரித்த அல்லது அவன் தரப்பில் இருந்த அனைத்து அரக்கர்களும் அவனுடன் அழிந்தார்கள் . அவனது குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததால், அவர்கள் தண்டனையை அனுபவித்தார்கள். எவர் தவறிழைத்தாலும், அவர்கள் ஒரு மகனோ, மகனோ, துணைவியோ,ஒரு உறவினரோ அல்லது ஒரு நெருங்கிய கூட்டாளியோ, அந்தத் தவறை எதிர்த்து, தவறிழைப்பவரை உண்மையாகத் திருத்த முயன்றால் மட்டுமே,ஒருவர் தவறுக்குத் துணை போன குற்றத்தின் களங்கம் இன்றி இருக்க முடியும். அதற்கு பதிலாக, அவர்கள் அதை அனுமதித்தாலோ அல்லது அது நடக்க ஊக்குவித்தாலோ, அவர்கள் அதற்கு உடந்தையாக இருந்த குற்றம் இழைத்தவர்களாக ஆகி, அவர்களது செயல்களின் விளைவுகளை அனுபவிப்பார்கள்.
உங்களது ப்ரேமையின் மூலம், ஒரு தீய மனிதனைக் கூட ,
நீங்கள் திருத்தி விட முடியும் - பாபா