azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 21 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 21 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Learn to live in harmony and unity. The village (society) is to the villagers (members of the society) what the body is to the individual. Every organ in the body functions in cooperation with every other part. If the foot steps on a thorn, the eye feels the pain and sheds tears. If the eye notices a thorn or stone on the road, it warns the foot to avoid it. Villagers should develop the same sense of unity and share their joys and troubles as one organic body. There is nothing you cannot achieve with unity as your strength. With purity and unity, you can unravel your Divinity and develop genuine devotion to God. You should fill your hearts with love and make your lives holy and purposeful. When everyone works in this spirit of unity and charity, the village would become a model for all the rest. - Divine Discourse, May 22, 1986
PURITY, UNITY AND DIVINITY - THESE SHOULD BE YOUR WATCHWORDS;
FOR THEY ALONE CAN ENSURE MATERIAL AND SPIRITUAL WELL-BEING. - BABA
இசைவாகவும், ஒற்றுமையாகவும் வாழக் கற்றுக் கொள்ளுங்கள். உடல், ஒரு மனிதருக்கு எப்படியோ, ஒரு கிராமம் (சமூகம் ), கிராம வாசிகளுக்கு (சமூகத்தின் அங்கத்தினர்கள்) அப்படியே. உடலின் ஒவ்வொரு அங்கமும், இதர ஒவ்வொரு அங்கத்துடனும் கூட்டுறவுடன் செயலாற்றுகிறது, காலில் ஒரு முள் குத்தினால், கண் அந்த வேதனையை உணர்ந்து, கண்ணீர் வடிக்கிறது. கண் ஒரு முள்ளையோ அல்லது ஒரு கல்லையோ தெருவில் கண்டால், அதைத் தவிர்க்குமாறு பாதத்திற்கு எச்சரிக்கிறது.கிராம வாசிகளும் அதே விதமான ஒற்றுமை உணர்வை வளர்த்துக் கொண்டு, ஒரே கூட்டுக் குடும்பமாக, அவர்களது இன்பங்களையும், இன்னல்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒற்றுமையை உங்கள் வலிமையாகக் கொண்டால், உங்களால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. பரிசுத்தம் மற்றும் ஒற்றுமையால், நீங்கள் உங்களது தெய்வீகத்தை உணர்ந்து, இறைவன் பால் உண்மையான பக்தியை வளர்த்துக் கொள்ள முடியும். நீங்கள் உங்களது இதயங்களை ப்ரேமையால் நிரப்பிக் கொண்டு, உங்களது வாழ்க்கைகளை புனிதமானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் ஒற்றுமை மற்றும் ஈகை உணர்வுடன் செயலாற்றும் போது, மற்ற அனைவருக்கும் கிராமம், ஒரு முன்னுதாரணமாகத் திகழும்.
பரிசுத்தம், ஒற்றுமை மற்றும் தெய்வீகம் – இவையே உங்களது தாரக மந்திரமாக இருக்க வேண்டும்; ஏனெனில்,அவை மட்டுமே,உலகியல் மற்றும் ஆன்மீக நலனை உறுதி செய்ய வல்லவை - பாபா