azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 19 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 19 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
The Peace or distraction, calm or anxiety that you experience today is the product of your own thoughts and deeds, and your attitude or behaviour towards yourself and others. Many take up the process of regular meditation on the name and form of God, and are able to quieten the agitations of the heart and open the way to inner realisation. Dhyana should not be wavering from one ideal to another; nor should it be reduced to a mere mechanical textbook formula, or a rigid time-table of breathing or meaningless staring at the tip of the nose! It is a rigorous discipline of the senses, the nervous current, and the wings of imagination. That is why it is aptly said, Dhyana is the valley of peace that lies on the other side of a huge mountain range of peaks called the six foes - lust, anger, greed, attachment, pride and envy. You must climb over the range and reach the valley beyond. - Divine Discourse, Jun 9, 1970
WHEN YOU THINK, SPEAK AND DO GOOD, YOU WILL NATURALLY EXPERIENCE PEACE. - BABA
நீங்கள் இன்று அனுபவிக்கும் சாந்தியோ அல்லது கவனச்சிதறலோ, அமைதியோ அல்லது கலக்கமோ, உங்களது சொந்த சிந்தனைகள் மற்றும் செயல்கள் மேலும் உங்கள் மீதும் ,பிறரின் மீதும் உங்களது மனப்பாங்கு மற்றும் நடத்தை ஆகியவற்றின் விளைவுகளே. பலர் இறைவனது நாம, ரூபங்களின் மீதான முறையான தியான முறையைக் கடைப்பிடிக்கிறார்கள்; அதன் மூலம், இதயத்தின் கலக்கங்களை அமைதிப்படுத்தி, ஆத்ம சாக்ஷாத்காரத்திற்கான பாதையை திறக்கச் செய்துள்ளார்கள். தியானம் ஒரு இலட்சியத்திலிருந்து மற்றொரு இலட்சியத்திற்குத் தாவுவதாக இருக்கக் கூடாது; அல்லது வெறும் ஒரு இயந்திர மயமான புத்தக முறை அல்லது ஒரு கடுமையான மூச்சுப் பயிற்சியின் கால அட்டவணை அல்லது மூக்கின் நுனியை அர்த்தமற்று கூர்ந்து பார்ப்பது என்ற அளவிற்குத் தாழ்த்தப் பட்டு விடக் கூடாது ! அது, புலன்கள், நரம்பு ஓட்டம் மற்றும் கற்பனைகளின் இறக்கைகளைக் கட்டுப்படுத்தும் ஒரு கடினமான முறையாகும். அதனால் தான், தியானம் என்பது, காம, க்ரோத, லோப, மோஹ, மத, மற்றும் மாத்ஸர்யங்கள் எனப்படும் ஆறு பெரிய மலை உச்சிகளின் மறு பக்கத்தில் இருக்கும் சாந்தியின் பள்ளத்தாக்கு எனப் பொருத்தமாக அழைக்கப்படுகிறது. நீங்கள் இந்த மலைத் தொடர்கள் மீது ஏறி, அதற்கு அப்பால் இருக்கும் பள்ளத்தாக்கினை அடைய வேண்டும்.
நல்லதையே சிந்தித்து,சொல்லி,செய்யும் போது,
நீங்கள் இயல்பாகவே சாந்தியை அனுபவிப்பீர்கள் - பாபா