azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 16 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 16 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Jealousy manifests itself in many forms, including the form of finding fault even in the Divine. People are jealous if someone earned a better name than themselves. Some are jealous of those who are more good looking than themselves. Students envy others who secure more marks in the examination. A jealous person cannot bear to see the other person who is better placed, more beautiful or more prosperous. This is a sign of human weakness. Once jealousy takes root in your mind, in due course, it will destroy all your other achievements. It promotes demonic qualities, dehumanises an individual and reduces one to the condition of an animal. Because of its egregious evil tendency, jealousy should be rooted out from the very beginning. You must learn to enjoy another's prosperity and happiness. This is a great virtue. (Divine Discourse, Sep 6, 1984)
TO RESURRECT LOVE AND COMPASSION, YOU MUST KILL JEALOUSY AND
SELFISHNESS AND PURIFY YOUR HEART. - BABA
பொறாமை என்பது, இறைவன் மீதே கூட குறை காண்பது உட்பட, பல விதங்களில் வெளிப்படுகிறது. யாராவது, அவர்களை விட நல்ல பெயர் எடுத்தால், மனிதர்கள் பொறாமைப் படுகிறார்கள். தங்களை விட அழகாக இருப்பவர்களைக் கண்டும் சிலர் பொறாமைப் படுகிறார்கள். மாணவர்கள், தங்களை விட அதிக மதிப்பெண்களை வாங்கிய பிறரைக் கண்டு பொறாமைப் படுகிறார்கள். ஒரு பொறாமைக்கார மனிதரால், தன்னை விட உயர்ந்த நிலையில் இருப்பவர், அதிகம் அழகானவர் அல்லது அதிகம் செல்வம் படைத்தவரைக் கண்டு சகித்துக் கொள்ள முடிவதில்லை. இது மனிதனின் பலவீனத்தின் ஒரு அறிகுறியாகும். ஒரு முறை உங்கள் மனதில் பொறாமை வேறூன்றி விட்டால், நாளடைவில், அது உங்களது பிற அனைத்து சாதனைகளையும் அழித்து விடும். அது அசுர குணங்களை வளர்த்து, தனி ஒருவரது மனிதத்துவத்தை நீக்கி, ஒருவரை விலங்கின் நிலைக்குத் தாழ்த்தி விடுகிறது. அதனது கோரமான தீய மனப்பாங்கைக் கருதி, ஆரம்பத்திலேயே, பொறாமையை வேறோடு பிடுங்கி எரிந்து விட வேண்டும். நீங்கள் பிறரது வளமை மற்றும் சந்தோஷத்தைக் கண்டு ஆனந்தப்படக் கற்றுக் கொள்ள வேண்டும். அது ஒரு மிகச் சிறந்த நற்குணமாகும்.
ப்ரேமையையும்,பரிவையும்,புணருத்தாரணம் செய்வதற்கு, நீங்கள் பொறாமையையும், சுயநலத்தையும் அழித்து, உங்கள் இதயத்தை பரிசுத்தமாக்கிக் கொள்ள வேண்டும் - பாபா