azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 13 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 13 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Youth today are in great need of good company. By associating with people who use bad language and indulge in unholy deeds, youth take to bad ways. You should totally eschew bad company of every kind. You need a lamp to find a way through a dark jungle. Likewise, in the jungle of life, you need the light and guidance of good individuals to keep you company on the right path and to lead you to the right goal. Even a bad person, in association with the good, gets reformed. But a good person, falling into bad company, becomes bad. If you add one litre of milk to ten litres of water, milk is so diluted that it becomes valueless. But one litre of water added to ten litres of milk acquires higher value. When you cultivate friendship, ensure that you join a group of those who are good in their speech, behaviour and actions. Maintain only normal relations with others. (Divine Discourse, Feb 19, 1987)
YOUTH IS THE STAGE IN LIFE WHEN THE SLIGHTEST TURN
TOWARDS WRONG WILL SPELL DISASTER. - BABA
இளைஞர்களுக்கு இன்று நல்லோரின் நட்பு தேவையாக இருக்கிறது. கெட்ட வார்த்தைகளைப் பேசி, புனிதமற்ற செயல்களில் ஈடுபடுவோர்களோடு சேர்வதால், இளைஞர்கள் தவறான பாதைகளில் செல்கிறார்கள். நீங்கள் எல்லாவிதமான தீய நட்பையும், முழுமையாகத் தவிர்த்து ஒதுக்க வேண்டும். ஒரு இருண்ட கானகத்தில் வழி காண்பதற்கு உங்களுக்கு ஒரு விளக்கு தேவை. அதைப் போலவே, வாழ்க்கை எனும் கானகத்தில், உங்களைச் சரியான பாதையில் இருக்கச் செய்து,சரியான குறிக்கோளுக்கு இட்டுச் செல்ல வல்ல, நல்லவர்களின் வழி காட்டுதல் உங்களுக்குத் தேவை.ஒரு தீய மனிதன் கூட, நல்லவர்களோடு இணைவதால், திருந்தி விடுகிறார்.ஆனால் ஒரு நல்ல மனிதர், தீயவர்களின் நட்பு வட்டத்தில் வீழ்வதால், தீயவராக ஆகி விடுகிறார்.ஒரு லிட்டர் பாலை, பத்து லிட்டர் தண்ணீரில் சேர்த்தால், பாலும் மதிப்பில்லாத அளவு நீர்த்து விடுகிறது. ஆனால், பத்து லிட்டர் பாலில் சேர்க்கப் பட்ட ஒரு லிட்டர் தண்ணீர் உயர்ந்த மதிப்பை அடைந்து விடுகிறது. நீங்கள் நட்பை வளர்க்கும் போது, நல்ல பேச்சு, நன்னடத்தை மற்றும் நற்செயல்களை ஆற்றும் ஒரு குழுவினரோடு சேருவதை உறுதி செய்து கொள்ளுங்கள். பிறருடன் ஒரு சாதாரண உறவை மட்டுமே வைத்துக் கொள்ளுங்கள்.
இளமை என்பது,தவறான ஒரு சிறு திருப்பம் ஆனால் கூட,
பேரழிவில் முடியக் கூடிய , வாழ்க்கையின் ஒரு கட்டமாகும். - பாபா