azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 12 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 12 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
The great spiritual masters like Ramakrishna Paramahamsa, Vivekananda, Tulsidas, and so on led supremely contented lives. There were numerous occasions when they would not even get food to eat. They regarded such occasions as invitations by God to observe fasting (upavasam); for them this was food for their Spirit. Through contemplation of God, they enjoyed such fasts. Whenever they were entertained to a rich feast, they considered that too as a gift from God. Whether it was a fast or feast, they looked upon both with the same sense of contented acceptance. They were not depressed by the former or elated by the latter. ‘Equal-mindedness is yoga’ (Samatvam yogamuchyate), says the Gita. The ancient sages practised this virtue. Equal-mindedness is the index of contentment. And this should be taught to our young people and cultivated by them. One who has achieved contentment can enjoy the bliss of Divine grace. (Divine Discourse, Feb 19, 1987)
INSTALL TRUTH AND RIGHTEOUSNESS IN YOUR HEART, YOUR MIND WILL BE FILLED WITH GOOD THOUGHTS. YOUR LIFE WILL BECOME EMINENTLY MEANINGFUL AND WORTHY. - BABA
தலைசிறந்த ஆன்மீக குருமார்களான, ராமகிருஷ்ண பரமஹம்ஸர், விவேகானந்தர், துளசிதாஸ் போன்றவர்கள் உன்னதமான திருப்தி கொண்ட வாழ்க்கைகளை வாழ்ந்தார்கள். பல சமயங்களில், அவர்களுக்குச் சாப்பிடுவதற்கு உணவு கூட கிடைத்ததில்லை.இப்படிப் பட்ட சந்தர்ப்பங்களை அவர்கள், உபவாஸத்தைக் கடைப்பிடிப்பதற்கு இறைவன் அளித்த அழைப்பிதழ்கள் என்று கருதினார்கள்; அவர்களுக்கு இதுவே ஆத்மாவிற்கான ஆகாரமாக இருந்தது. இறைத் தியானத்தின் மூலம், இப்படிப் பட்ட உபவாஸங்களை அவர்கள் சந்தோஷமாக அனுபவித்தார்கள். எப்போதெல்லாம், அவர்களுக்கு ஒரு வளமான விருந்து கிடைத்ததோ, அதையும் கூட அவர்கள் இறைவன் அளித்த பரிசாகக் கருதினார்கள். விரதமோ அல்லது விருந்தோ, அவர்கள் இரண்டையுமே ஒரே வித மனநிறைவு உணர்வுடன் ஏற்றுக் கொண்டார்கள். முன்னதைக் கண்டு மனம் தளரவோ, பின்னதைக் கண்டு மனம் மகிழவோ இல்லை.‘’ சமச்சீரான மனப்பாங்கே யோகம் (ஸமத்வம் யோகமுச்யதே) என்கிறது ஸ்ரீமத் பகவத்கீதை. பண்டைய கால முனிவர்கள் இந்த சீலத்தைக் கடைப்பிடித்தார்கள். சமச்சீரான மனப்பாங்கே, மனநிறைவின் அளவுகோலாகும். நமது இளைஞர்களுக்கு இது போதிக்கப்பட்டு, அவர்களால் அது வளர்க்கப் பட வேண்டும். மனநிறைவு பெற்ற ஒருவர், இறை அருளின் ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்.
உங்கள் இதயத்தில் சத்தியத்தையும்,தர்மத்தையும் நிலைநிறுத்துங்கள் ; உங்கள் மனம் நல்ல எண்ணங்களால் நிரம்பி விடும். உங்கள் வாழ்க்கை சிறப்பான அர்த்தமுள்ளதாகவும், தகுதியானதாகவும் ஆகி விடும்- பாபா