azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 09 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 09 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Dear Balvikas Gurus! When you teach the children, you must remember that you are engaged in a noble task for the sake of the children entrusted to your care. You must feel that you are educating yourselves when you are educating the children. For instance, when you impart some knowledge to the children, your own understanding of the subject improves. Even when you study books for teaching the children, you also derive joy from the study. Hence you must always have the feeling that whatever you do for others is in reality a service done to the Divine that resides in every one. When teachers do their duty in this spirit, they will be imbuing the children with the spirit of Universal love. Remember that the children have tender hearts and innocent minds. Only if you fill their hearts with love will the world have genuine peace. (Divine Discourse, Dec 30, 1983)
RESOLVE TO SACRIFICE EVERYTHING YOU HAVE FOR THE SAKE OF THE PURE-HEARTED CHILDREN
WHO RELY ON YOU FOR GUIDANCE. - BABA
அன்பான பாலவிகாஸ் குருமார்களே! நீங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்கும் போது, உங்களது பராமரிப்பில் ஒப்படைக்கப் பட்டுள்ள குழந்தைகளுக்கான ஒரு சீரிய பணியில் நீங்கள் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்குக் கற்பிக்கும் போது, நீங்கள் உங்களுக்கே கற்பித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதை உணர வேண்டும். உதாரணமாக, நீங்கள் குழந்தைகளுக்கு ஏதாவது அறிவைப் புகட்டும்போது, அந்தத் தலைப்பைப் பற்றிய உங்களது சொந்த புரிதல் மேம்படுகிறது. குழந்தைகளுக்கு போதிப்பதற்காக, நீங்கள் புத்தகங்களைப் படிக்கும் போதும் கூட, அதிலிருந்து நீங்களும் கூட சந்தோஷத்தை அடைகிறீர்கள். எனவே, பிறருக்காக நீங்கள் செய்வது எதுவாக இருந்தாலும், அது உண்மையிலேயே, ஒவ்வொருவருள்ளும் உறையும் இறைவனுக்கே ஆற்றுகிறீர்கள் என்ற உணர்வு உங்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும். குருமார்கள் தங்களது கடமையை இந்த உணர்வோடு ஆற்றும் போது, அவர்கள் அந்தக் குழந்தைகளுக்குள், பிரபஞ்சமயமான ப்ரேமை உணர்விற்கு வித்திடுகிறார்கள்.குழந்தைகள் மிருவான இதயங்களும், அப்பழுக்கற்ற மனங்களும் கொண்டவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள், அவர்களது இதயங்களை ப்ரேமையால் நிரப்பினால் மட்டுமே, இந்த உலகம் உண்மையான சாந்தியைப் பெற்றிருக்கும்.
வழிகாட்டுதலுக்காக, உங்களையே நம்பி இருக்கும் பரிசுத்தமான இதயம் கொண்ட குழந்தைகளுக்காக, உங்களது அனைத்தையும் தியாகம் செய்ய ஸங்கல்பம் எடுத்துக் கொள்ளுங்கள் - பாபா