azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 08 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 08 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

In order to live up to the high standards of morality which Indian culture exhorts, you must cultivate love, nonviolence, fortitude and equanimity. The last three guard and foster the first. Many people have succeeded with the help of the latter three qualities, to get their minds established in Universal love! Indeed, quite a large number of spiritual aspirants have also given up their spiritual ascent midway because they lose confidence in their true selves. The first faint whisper of doubt disheartens them and they slide back into a life of sensual satisfactions. They lose faith in God who is the Embodiment of Love and is their real sustenance. Sadhana alone can steel people to forge ahead on the spiritual path. The wise are buoyed up by the bliss of their genuine awareness. Hang on, persist in your sadhana, have faith in yourself and derive strength and joy only from God! (Divine Discourse, Jun 6, 1978) (SSS Vol 14, Ch 4)
DEPRESSION, DOUBT, CONCEIT - THESE ARE RAHU AND KETHU TO THE SPIRITUAL ASPIRANT. - BABA
பாரதீய கலாசாரம் அறிவுறுத்தும் சீலத்தின் மிக உயர்ந்த தரத்திற்கு ஏற்ப வாழ்வதற்கு, நீங்கள் ப்ரேமை, அஹிம்ஸை, மனத்திண்மை மற்றும் சமச்சீரான மனநிலை ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதில் கடைசி மூன்றும், முதலாவதைப் பேணிப் பாதுகாக்கிறது. பல மனிதர்கள், இந்த மூன்று குணங்களின் உதவியுடன், தங்களது மனங்களை பிரபஞ்ச மயமான ப்ரேமையில் நிலை கொள்ளச் செய்வதில் வெற்று பெற்றுள்ளார்கள் ! உண்மையில், கணிசமான பல ஆன்மீக சாதகர்கள் கூட, தங்களது உண்மையான நிலைமையில் நம்பிக்கையை இழந்ததன் மூலம், அவர்களது ஆன்மீக முன்னேற்றத்தை, நடுவழியிலேயே கை விட்டு விட்டார்கள். சந்தேகத்தின் மங்கலான முதல் முணுமுணுப்பே, அவர்களை அதைரியப் படுத்தி விடுகிறது; அவர்கள் புலனின்பத் திருப்திகளாலான ஒரு வாழ்க்கைக்குப் பின் வழுவிச் சென்று விடுகிறார்கள். அவர்களது உண்மையான ஆதாரமும், ப்ரேமையின் திருவுருவமும் ஆன இறைவன் பால் நம்பிக்கையை இழந்து விடுகிறார்கள். ஆன்மீக சாதனை மட்டுமே, மனிதர்களை, ஆன்மீகப் பாதையில் முன்னேறிச் செல்வதற்கான மனவலிமையைத் தர வல்லதாகும். புத்திசாலிகள், அவர்களது உண்மையான விழிப்புணர்வின் ஆனந்தத்தால், உத்வேகம் அடைகிறார்கள். விடாப்பிடியாக உங்களது ஆன்மீக சாதனையைத் தொடர்ந்து செய்து, உங்கள் மீதே நம்பிக்கை வைத்து, வலிமையையும், சந்தோஷத்தையும், இறைவனிடமிருந்து மட்டுமே பெறுங்கள் !
மன அழுத்தம்,சந்தேகம்,மற்றும் அகந்தை –
இவை ஆன்மீக சாதகருக்கு ராகு, கேது போன்றவை- பாபா