azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 07 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 07 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Balvikas Gurus should keep their emotions under control and not exhibit depression, dejection or wavering will. Your quality of work is more important than quantity, so don’t undertake to do more than what you can render satisfactorily. Let your own conscience be the judge and decide whether you discharge your duty sufficiently to the children and society. You may face various problems while conducting the classes - solve them with discrimination and deep love. Meet these problems with a desire to serve the children better and you will be able to overcome them easily. Gradually you will realise that Balvikas is devised not merely for education of children but also for gurus. Balvikas duties will elevate and sublimate the guru’s thoughts and emotions far better than any other spiritual discipline. Remember that as gurus, you too have a guru guiding you and overseeing your Seva. Gurus are pupils too, learning lessons of equality, equanimity and selfless love with your Omniscient Guru. (Divine Discourse, Jun 6, 1978) (SSS Vol 14, Ch 3)
LIFE IS A CHALLENGE, MEET IT; LIFE IS A DREAM, REALISE IT;
LIFE IS A GAME, PLAY IT; LIFE IS LOVE ENJOY IT. - BABA
பாலவிகாஸ் குருமார்கள், தங்களது உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்துக் கொண்டு, மன அழுத்தம், மனச்சோர்வு அல்லது ஊசலாடும் மனத்திண்மை ஆகியவற்றை வெளிப்படுத்தக் கூடாது. உங்களது பணியின் தரம் முக்கியமே அன்றி, அளவு அல்ல; எனவே, உங்களால் எந்த அளவு திருப்திகரமாகச் செய்ய முடியுமோ, அதற்கு மேல் செய்ய விழையாதீர்கள். உங்களது மனச்சாட்சியே நீதிபதியாக இருந்து, நீங்கள் , குழந்தைகளுக்கும் , சமுதாயத்திற்கும் உள்ள கடமையை போதுமான அளவு செய்கிறீர்களா என அதுவே முடிவு செய்யட்டும். நீங்கள் இந்த வகுப்புகளை நடத்தும் போது, பல பிரச்சனைகளை எதிர் கொள்ள நேரிடலாம்- அவற்றை விவேகத்துடனும், ஆழ்ந்த ப்ரேமையுடனும் தீர்த்து வையுங்கள். இந்தப் பிரச்சனைகளை, குழந்தைகளுக்கு மேலும் அதிகமாக சேவை ஆற்ற வேண்டும் என்ற விருப்பத்துடன் அணுகுங்கள்; நீங்கள் இவற்றை எளிதாக வெல்ல முடியும்.படிப்படியாக, பாலவிகாஸ், வெறும் குழந்தைகளுக்கு போதிப்பதற்காக மட்டும் இன்றி, குருமார்களுக்காகவும் தான், வடிவமைக்கப் பட்டுள்ளது என்பதை உணர்வீர்கள். குருமார்களின் சிந்தனைகள் மற்றும் உணர்வுகளை, பாலவிகாஸ் கடமைகள், வேறு எந்த ஆன்மீக சாதனையையும் விடவே, மிகச் சிறப்பாகவே உயர்த்தி, உன்னத நிலைக்கு எடுத்துச் செல்லும். குருமார்களாகிய உங்களுக்கும் கூட ஒரு குரு இருந்து, உங்களை வழி நடத்தி, உங்களது சேவையை மேற்பார்வை செய்து கொண்டு இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குருமார்களும் கூட, உங்கள் குருவாகிய அனைத்தும் அறிந்த இறைவனிடமிருந்து, சமத்துவம், சமச்சீரான மனப்பாங்கு மற்றும் தன்னலமற்ற ப்ரேமை ஆகியவற்றின் பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களே.
வாழ்க்கை ஒரு சவால், அதை எதிர் கொள்ளுங்கள் ! வாழ்க்கை ஒரு கனவு, அதை உணருங்கள்; வாழ்க்கை ஒரு விளையாட்டு, அதை விளையாடுங்கள் ! வாழ்க்கை ப்ரேமையே, அதை அனுபவியுங்கள்! - பாபா