azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 05 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 05 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
All of you must possess these four important qualities: Peace (Shanti), Truth (Satya), absence of egoism (Nirahankara) and absence of envy (Anasuya). Suffusing all the four is the quality of pure love. These qualities cannot be obtained from the market, through studies, from a teacher or as a gift from someone. You can acquire them only through your own effort. Cultivate and develop these noble qualities from childhood. Out of fear of punishment by parents or teachers, children indulge in falsehood and avoid speaking the complete truth. This tendency in due course results in vitiating their entire life by making them lead double lives. From childhood, children should be taught to speak truth and admit their mistakes. There is nothing wrong in being corrected for misdeeds; these corrections will help them to learn to behave well as adults. Speaking truth, irrespective of any difficulty that may come, must be imprinted firmly and deeply in young minds and hearts which are pure and untainted. (Divine Discourse, Dec 30, 1983)
INSTALL TRUTH AND RIGHTEOUSNESS IN YOUR HEART, YOUR MIND WILL BE FILLED WITH GOOD THOUGHTS. YOUR LIFE WILL BECOME EMINENTLY MEANINGFUL AND WORTHY. - BABA
நீங்கள் அனைவரும், சாந்தி, சத்யம், அஹங்காரமின்மை (நிர்அஹங்கார) மற்றும் பொறாமையின்மை ( அனசூயா ) என்ற நான்கு முக்கியமான குணங்களைக் கொண்டிருக்க வேண்டும். இந்த நான்கனைத்திலும் தோய்ந்திருப்பதே, பரிசுத்தமான ப்ரேமையின் குணமாகும். இந்த குணங்களை, சந்தையிலிருந்தோ, கல்வியின் மூலமோ, ஒரு ஆசிரியரிடமிருந்தோ அல்லது எவரிடமிருந்து பரிசாகவோ, பெற முடியாது.இவற்றை, உங்களது சொந்த முயற்சியினால் மட்டுமே நீங்கள் பெற முடியும்.இந்த சீரிய குணங்களை சிறு வயதிலிருந்தே வளர்த்து, அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள். பெற்றோர்கள் அல்லது ஆசிரியர்களின் தண்டனைக்கு பயந்து, குழந்தைகள் பொய்மையில் ஈடுபட்டு, முழுமையான உண்மையைப் பேசுவதைத் தவிர்க்கிறார்கள்.இந்த மனப்பாங்கு,நாளடைவில், அவர்களை இரட்டை வாழ்க்கை நடத்தச் செய்து, அவர்களது வாழ்வனைத்தையும் பாழடித்து விடுகிறது. குழந்தைப் பருவத்திலிருந்தே, குழந்தைகளுக்கு, உண்மையைப் பேசுவதற்கும், அவர்களது தவறுகளை ஒப்புக் கொள்வதற்கும் கற்றுத் தரப்பட வேண்டும். தவறான செயல்களுக்காக, திருத்தப் படுவதில் எந்தத் தவறும் இல்லை; இந்தத் திருத்துதல்கள், பெரியவர்களான ஆன பின் அவர்கள் நல்ல முறையில் நடப்பதைக் கற்றுக் கொள்ள அவர்களுக்கு உதவும். எந்தக் கஷ்டம் வந்தாலும், உண்மையைப் பேச வேண்டும் என்பது இளைஞர்களின் தூய மற்றும் களங்கமற்ற மனங்கள் மற்றும் இதயங்களில்,ஆணித்தரமாகவும்,ஆழமாகவும் பதிவு செய்யப் பட வேண்டும்.
உங்கள் இதயத்தில் சத்தியத்தையும்,தர்மத்தையும் நிலைநிறுத்துங்கள் ; உங்கள் மனம் நல்ல எண்ணங்களால் நிரம்பி விடும். உங்கள் வாழ்க்கை சிறப்பான அர்த்தமுள்ளதாகவும், தகுதியானதாகவும் ஆகி விடும்- பாபா