azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 02 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 02 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Whether you see God or not, He is omnipresent; He is in the past, the present, and the future! God is and can be, only one, not many! "There is only One God and He is Omnipresent! There is only one religion, the Religion of Love. There is only one language, the Language of the Heart." This God must be visualized through constant spiritual discipline. Do not involve yourself in doubt and hesitation. If only you observe spiritual discipline and purify your consciousness, you will see God installed in your heart. There is sugar in the cup, but the water is insipid, for you have not stirred it well. There is God in the world, and by stirring the Divine well into every drop or atom thereof, you can make your world very sweet to live by. Intelligence is the spoon; sadhana is the process of stirring. Saturate every moment of your life with God; your daily life will taste sweeter! (Divine Discourse, Dec 25, 1970)
LIFE IS A CHALLENGE, MEET IT; LIFE IS A DREAM, REALISE IT;
LIFE IS A GAME, PLAY IT; LIFE IS LOVE ENJOY IT. - BABA
நீங்கள் இறைவனைக் காண முடிந்தாலும், முடியாவிட்டாலும், அவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ளான். அவனே, கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர் காலமும் ஆவான் ! இறைவன் ஒருவனே, ஒருவனாக மட்டுமே இருக்க முடியும், பலர் அல்ல ! ‘’ இறைவன் ஒருவனே, அவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன். இருப்பது ஒரே மதம் ,அதுவே அன்பு மதம். இருப்பது ஒரே ஒரு மொழி அதுவே இதய மொழி ‘’இந்த இறைவனை இடையறாத ஆன்மீக சாதனையின் மூலம் காண வேண்டும். சந்தேகம் அல்லது தயக்கத்தில் உங்களை நீங்களே ஆழ்த்திக் கொள்ளாதீர்கள். ஆன்மீக சாதனையைக் கடைப்பிடித்து, உங்களது மனச்சாட்சியை பரிசுத்தப் படுத்தி மட்டும் விட்டீர்கள் என்றால், உங்கள் இதயத்தில் இறைவன் கொலு வீற்றிருப்பதை நீங்கள் காண்பீர்கள். கோப்பையில் சர்க்கரை இருக்கிறது; ஆனால் நீரில் சுவை இல்லை; ஏனெனில், நீங்கள் அதை நன்றாகக் கலக்கவில்லை. இந்த உலகில் இறைவன் உள்ளான்; தெய்வீகத்தின் ஒவ்வொரு துளி அல்லது அணுவையும் நன்கு கலக்குவதன் மூலம், நீங்கள் உங்கள் உலகத்தை, வாழ்வதற்கு மிகவும் இனிமையானதாக ஆக்கிக் கொள்ள முடியும். புத்தியே கரண்டி, ஆன்மீக சாதனையே கலக்கும் முறை. உங்களது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் இறைவனில் தோய்ந்திருக்குமாறு செய்யுங்கள்; உங்களது அன்றாட வாழ்க்கை மிகவும் இனிமையானதாக சுவைக்கும் !
வாழ்க்கை ஒரு சவால், அதை எதிர் கொள்ளுங்கள் ! வாழ்க்கை ஒரு கனவு, அதை உணருங்கள்; வாழ்க்கை ஒரு விளையாட்டு, அதை விளையாடுங்கள் ! வாழ்க்கை ப்ரேமையே, அதை அனுபவியுங்கள்! - பாபா