azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 31 Dec 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 31 Dec 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Under any and all circumstances, let your feelings and actions be pure, noble and ideal. Let all your actions be for the highest good of all. Your heart is the centre of sacred feelings. It is filled with compassion. It is compassion that gives rise to sacred feelings. You must develop compassion, spread the light of love and cultivate Divine feelings. Without doing so, how can you expect time to confer happiness on you? If you expect good results, you must cultivate good feelings. With purity of heart, steadiness of mind and selfless actions, you can become the recipient of Divine grace, which will remove any amount of suffering in a trice. Hence always discriminate and undertake such activities which will confer Divine grace, which will in turn, bless you with peace and happiness! (Divine Discourse, Jan 1, 2001)
REAL HAPPINESS LIES WITHIN YOU. - BABA
எந்தவிதமான மற்றும் அனைத்து சந்தர்ப்பங்களிலும், உங்களது உணர்வுகளும் செயல்களும், பரிசுத்தமானதாகவும், சீலமானதாகவும், சீரியதாகவும் இருக்கட்டும். உங்களது செயல்கள் அனைத்தும், அனைவரின் தலைசிறந்த நன்மைக்கானதாக இருக்கட்டும்.உங்களது இதயமே புனிதமான உணர்வுகளின் மையமாகும்.அது தயையால் நிரம்பி உள்ளது. தயையே, புனிதமான உணர்வுகளை தட்டி எழுப்புகிறது.நீங்கள் தயையை அபிவிருத்தி செய்து கொண்டு, ப்ரேம ஜோதியைப் பரப்பி, தெய்வீக உணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.அவ்வாறு செய்யாமல், காலம் உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்க வேண்டும் என்று எவ்வாறு நீங்கள் எதிர்பார்க்க முடியும் ? நீங்கள் நல்ல விளைவுகளை எதிர்பார்த்தால், நல்ல உணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பரிசுத்தமான இதயத்துடனும், நிலைகுலையாத மனத்துடனும் மற்றும் தன்னலமற்ற செயல்களினால், எத்தனை அளவு துன்பத்தையும்,ஒரு கணப் பொழுதில் நீக்கவல்ல தெய்வீக அருளைப் பெறுபவர்களாக நீங்கள் ஆக முடியும். எனவே, எப்போதும் பகுத்தாராய்ந்து, தெய்வீக அருளை அளிக்க வல்ல செயல்களையே மேற்கொள்ளுங்கள்; அது பதிலுக்கு, உங்களுக்கு சாந்தி, சந்தோஷங்களை அளித்து விடும் !
உண்மையான ஆனந்தம் உங்களுள்ளேயே உள்ளது - பாபா