azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 27 Dec 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 27 Dec 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Everyone has faith in the power of love. When people ask, "How can we develop our love for the Lord?" The answer is: "There is only one way - to put into practice the love in which you have faith, then that love will grow." Because you do not practice what you profess, your faith gets weakened. A plant will grow only when it is watered regularly. When you plant the seed of love, you can make it grow only by watering it with love every day. The tree of love will grow and yield the fruits of love. Men and women today do not perform those acts which will promote love. When you wish to develop love for the Lord, you must continually practice loving devotion to the Lord. Devotion should flow from the heart, as was the case with the Gopikas. Much of what passes for devotion nowadays is artificial. Develop pure and sincere devotion, and sanctify your lives. (Divine Discourse, Sep 2, 1991.)
WHERE THERE IS CONFIDENCE THERE IS LOVE, WHERE THERE IS LOVE, THERE IS PEACE. - BABA
ஒவ்வொருவருக்கும், ப்ரேமையின் சக்தியில் நம்பிக்கை இருக்கிறது. எப்போது மக்கள், ‘’ நாங்கள், இறைவன் பால் எங்களது ப்ரேமையை எவ்வாறு வளர்த்துக் கொள்வது? ‘’ என்று கேட்கும்போது, அதற்கு பதில், ’’ அதற்கு ஒரே ஒரு வழி தான் இருக்கிறது –உங்களுக்கு நம்பிக்கை இருக்கும் ப்ரேமையை நடைமுறையில் கடைப்பிடியுங்கள் – பின்னர் ப்ரேமை வளரும் ‘’ என்பதே ஆகும். நீங்கள் கூறுவதை, நீங்களே கடைப் பிடிக்காததால் தான், உங்களது நம்பிக்கை பலவீனமடைகிறது.ஒரு செடிக்கு முறையாகத் தண்ணீர் பாய்ச்சப் பட்டால் தான் அது வளரும். ப்ரேமை எனும் விதையை நீங்கள் நட்டபின், ஒவ்வொரு நாளும் அதற்கு ப்ரேமை எனும் நீரைப் பாய்ச்சினால் மட்டுமே, நீங்கள் அதை வளரச் செய்ய முடியும். ப்ரேமை எனும் மரம் வளர்ந்து, ப்ரேமையின் பழங்களைத் தரும். இந்நாளில், ஆண்களும், பெண்களும், ப்ரேமையை வளர்க்கும் செயல்களைச் செய்வதில்லை. நீங்கள் இறைவன் பால் ப்ரேமையை வளர்த்துக் கொள்ள விரும்பினால், நீங்கள் தொடர்ந்து,ப்ரேமை கலந்த பக்தியைக் கடைப்பிடிக்க வேண்டும். பக்தி என்பது, கோபிகைகளைப் போல, இதயத்திலிருந்து ஊற்றெடுத்துப் பெருக வேண்டும். இந்நாளில் பக்தி எனப்படுபவற்றில், பெரும்பாலானவை, செயற்கையானவையே. பரிசுத்தமான, ஆத்மார்த்தமான ப்ரேமையை வளர்த்துக் கொண்டு, உங்களது வாழ்க்கைகளைப் புனிதப் படுத்திக் கொள்ளுங்கள்.
நம்பிக்கை இருக்கும் இடத்தில் ப்ரேமை இருக்கும்,
ப்ரேமை இருக்கும் இடத்தில் சாந்தி இருக்கும் - பாபா