azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 26 Dec 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 26 Dec 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Embodiments of Divine Love! When the mind is turned towards things of the world, it is called Anuraga (affection or attachment) and if it is turned towards God, it is called Prema (Love or devotion). Love is the fruit of love. Love is comparable only with love. Love can offer only love. Love cannot be described by poetry. It cannot be proved by the mind or the spoken word. Hence the Vedas declare that pure love transcends mind and speech. Love is priceless and indescribably precious. Its sweetness is unexcelled. Scriptures describe nectar (Amrit) as indescribably sweet. But Love is far sweeter than nectar. Love can be got only through love. Love is a precious diamond which can be got only in the realm of love and nowhere else. The kingdom of Love is located in a heart filled with love. Love can be experienced only in a mind flowing with love and a heart filled with love. (Divine Discourse, Sep 2, 1991)
A PEACEFUL MIND IS AN ABODE OF LOVE. - BABA
தெய்வீக ப்ரேமையின் திருவுருவங்களே ! எப்போது, மனம் உலகியலான பொருட்களின் பால் திரும்புகிறதோ,அது அனுராகம் அதாவது பற்றுதல் எனப்படுகிறது; அது இறைவனை நோக்கித் திரும்பினால், அது ப்ரேமை அதாவது அன்பு அல்லது பக்தி எனப்படுகிறது.ப்ரேமையே, ப்ரேமையின் பலனாகும். ப்ரேமையை, ப்ரேமையோடு மட்டுமே ஒப்பிட முடியும். ப்ரேமை, ப்ரேமையை மட்டுமே அளிக்க முடியும்.ப்ரேமையைக் கவிதையால் வர்ணிக்க முடியாது. அதை, மனதாலோ அல்லது வாக்காலோ நிரூபிக்க இயலாது. எனவே தான், வேதங்கள், பரிசுத்தமான ப்ரேமை, மனம் மற்றும் வாக்கிற்கு அப்பாற்பட்டது எனப் பறைசாற்றுகின்றன. ப்ரேமை விலைமதிப்பற்றதும், விவரிக்க முடியாத அளவு அரியதானதும் ஆகும். அதனது இனிமை வெல்ல முடியாததும் ஆகும். வேதங்கள், அம்ருதத்தை, வர்ணிக்க முடியாத அளவு இனிமையானது என விவரிக்கின்றன. ஆனால், ப்ரேமை, அம்ருதத்தை விடவே மிகவும் இனிமையானது. ப்ரேமையை, ப்ரேமையினால் மட்டுமே பெற முடியும். ப்ரேமையின் சாம்ராஜ்யத்தில் மட்டுமே, ப்ரேமை எனும் அரிய வைரத்தைப் பெற முடியுமே அன்றி, வேறெங்கும் அல்ல. ப்ரேமையின் சாம்ராஜ்யம், ப்ரேமை நிறைந்த ஒரு இதயத்திலேயே குடி கொண்டுள்ளது. ப்ரேமை ஊற்றெடுத்து ஓடும் ஒரு மனம் மற்றும் ப்ரேமை நிறைந்த ஒரு இதயம் ஆகியவற்றில் மட்டுமே ப்ரேமையை அனுபவிக்க முடியும்.
சாந்தி நிறைந்த மனமே ப்ரேமையின் உறைவிடம். - பாபா