azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 18 Dec 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 18 Dec 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

A home is filled with love, with the sacrifice that love involves, the joy that love radiates, and the peace that love imparts. The brick and mortar structure where parents and children spend their lives is a house, not a home; neither children yearn for it nor parents find peace therein. In your homes, one discipline all of you must heed is - the control of the senses! If you give them free rein, they will drag you into calamity. Education must render you monarch of your talents which are your tools for acquiring knowledge. The eye, the ear, the tongue are like wild horses that have no reins; learn the art of meditation (dhyana) by which the senses can be controlled and the will directed inwards, towards the mastery of feelings and emotions. Not just homes, nations that have no bridle on its sensuality can never thrive or survive. (Divine Discourse, Jul 26, 1969)
BE LIKE THE TONGUE IN THE MIDST OF THE TEETH, CAREFULLY, CONFIDENTLY, COURAGEOUSLY GOING ABOUT ITS TASK, WITHOUT GETTING BITTEN. - BABA
ஒரு இல்லம் என்பது, ப்ரேமை, அந்த ப்ரேமையில் உள் அடங்கி இருக்கும் தியாகம், அந்த ப்ரேமை பரப்பும் சந்தோஷம் மற்றும் அந்த ப்ரேமை அளிக்கும் சாந்தி ஆகியவற்றால், நிரம்பி இருப்பதாகும். பெற்றோர்களும், குழந்தைகளும் வசிக்கும் கல்லாலும்,மண்ணாலும் ஆன கட்டிடம் ஒரு வீடே அன்றி ஒரு இல்லம் அல்ல; குழந்தைகள் அதற்காக ஏங்குவதும் இல்லை, பெற்றோர்கள் அதில் சாந்தியைக் காண்பதும் இல்லை. உங்களது இல்லங்களில், நீங்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடு ஒன்று உள்ளது – அதுவே புலனடக்கம் ! நீங்கள் அவற்றைத் தறி கெட்டு ஓட விட்டால், அவை உங்களை அழிவிற்கு இழுத்துச் சென்று விடும். கல்வி உங்களை, ஞானத்தைப் பெறுவதற்கான கருவிகளான உங்களது திறமைகளுக்கு, அதிபதியாக இருக்குமாறு செய்ய வேண்டும். கண்,காது மற்றும் நாக்கு ஆகியவை, கடிவாளம் அற்ற காட்டுக் குதிரைகளைப் போன்றவை;தியானக் கலையைக் கற்றுக் கொள்ளுங்கள்; அதன் மூலம் புலன்களைக் கட்டுப் படுத்தவும், மன ஸங்கல்பத்தை, உள்நோக்கி அதாவது, உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை அடக்கி ஆள்வதை நோக்கிச் செலுத்தவும் முடியும். இல்லங்கள் மட்டுமல்ல, தன் புலனின்பங்களின் மீது, கடிவாளம் அற்ற தேசங்களும் ஒரு போதும் செழிக்கவோ அல்லது பிழைக்கவோ முடியாது.
பற்களுக்கு நடுவில், கவனமாகவும்,தன்னம்பிக்கையுடனும், தைரியமாகவும், கடிபடாமலும், தனது பணியை ஆற்றும் , நாக்கினைப் போல இருங்கள் -பாபா