azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 16 Dec 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 16 Dec 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
All men and women are caskets containing the Divine Glory. But you love some of them as friendly, hate some others as unfriendly, and divide them into camps and groups. When someone is good to you, attribute that goodness to godliness in them; when someone is bad to you, be happy that you have given them some satisfaction, by becoming the target for their attention! If anyone harms the body, sages are unaffected, because they know they are not the body! If anyone tries to harm the soul, sages know that it is impossible, for soul is ever in bliss! By means of Sadhana, become that type of sage, unaffected by pleasure and pain, loss or gain, victory or defeat. Be a witness, a disinterested witness of all the gyrations of fortune. Inquiry (vichara) will reveal to you that these are mere fleeting fantasies of your mind. By means of Japa and Dhyana (repetition of and meditation on the divine name), attain oneness with the Universal Absolute (Parabrahmam). (Divine Discourse, Jun 22, 1969)
PRACTICE DETACHMENT FROM NOW ON; PRACTICE IT LITTLE BY LITTLE, FOR A DAY WILL COMESOONER OR LATER WHEN YOU MUST GIVE UP ALL THAT YOU HOLD DEAR. - BABA
அனைத்து ஆண்களும்,பெண்களும்,தெய்வீக மாட்சிமையை உள்ளடக்கிய பெட்டகங்களே. ஆனால், நீங்கள் சிலரை நண்பர்களாகக் கருதி நேசிக்கிறீர்கள், சிலரை, அவர்கள் நண்பர்கள் அல்ல எனக் கருதி வெறுக்கிறீர்கள்; அவர்களை குழுக்களாகப் பிரித்து வைக்கிறீர்கள். சிலர் உங்களுக்கு நல்லது செய்தால், அந்த நல்லதை அவர்களுக்குள் உள்ள தெய்வீகம் எனக் கருதுங்கள்; யாராவது உங்களுக்குத் தீங்கு இழைத்தால்,அவர்களது கவனத்திற்கு இலக்காக ஆனதன் மூலம், அவர்களுக்கு சிறிது திருப்தியை நீங்கள் அளித்துள்ளீர்கள் என்று சந்தோஷப்படுங்கள் ! யாராவது உடலுக்குத் தீங்கு இழைத்தால், முனிவர்கள் பாதிக்கப்படுவதில்லை, ஏனெனில், அவர்களுக்குத் தாங்கள் உடல் இல்லை என்பது தெரியும் ! யாராவது ஆத்மாவிற்குத் தீங்கு இழைக்க முற்பட்டால், முனிவர்கள் அது இயலாத காரியம் என்று அறிவார்கள்; ஏனெனில் ஆத்மா எப்போதும் ஆனந்தமாகவே இருக்கிறது ! ஆன்மீக சாதனையின் மூலம், இன்ப, துன்பங்கள், லாப, நஷ்டங்கள், வெற்றி, தோல்விகள் ஆகியவற்றால் பாதிக்கப்படாத, அந்த முனிவர்களைப் போல ஆகுங்கள். ஒரு சாக்ஷியாக, அதாவது, அதிர்ஷ்டத்தின் அனைத்து களியாட்டங்களையும் ஆர்வமின்றி காணும் ஒரு சாக்ஷியாக இருங்கள். ஆராய்வது (விசார), இவை அனைத்தும், உங்களது மனதின் கண நேரத்தில் கலையும் கற்பனைகளே என்பதை எடுத்துக் காட்டும். ஜபம் மற்றும் தியானத்தின் மூலம் அந்த பரப்ரம்மத்துடன் ஒன்றரக் கலந்து விடுங்கள்.
இப்போதிலிருந்தே பற்றின்மையைப் பழகிக் கொள்ளுங்கள்; கொஞ்சம்,கொஞ்சமாகப் பழக்கப் படுத்திக் கொண்டு வாருங்கள், ஏனெனில், நீங்கள் பிரியமானவை என்று பிடித்துக் கொண்டு இருக்கும் அனைத்தையும் விட்டு விட வேண்டிய ஒருநாள் வரும் - பாபா