azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 15 Dec 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 15 Dec 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Home is the temple where the family, each member of which is a moving temple, is nurtured and nourished. Mother is the high priest of this house of God. The centre of every home must be the shrine; the fragrance of flower and incense emanating from there must pervade the home and purify it. Mother must set an example in making the shrine the heart of the household. She must enforce discipline over children in personal cleanliness, in humility, hospitality, good manners and in acts of service. She must persuade children to revere elders by example and precept, and to allot some time both in the morning and evening for prayer and silent meditation. Humility is the incense with which the house is filled. Reverence is the lamp that is lit with love as the oil and faith as the wick. I bless you that through your faith and strength, devotion and dedication may increase in this land. (Divine Discourse, Jul 26, 1969)
YOUR HEART IS THE SEAT OF PURE LOVE. IT MUST EXPRESS ITSELF,
TO BEGIN WITH, IN YOUR HOMES. - BABA
நடமாடும் கோவிலாக இருக்கும் குடும்ப அங்கத்தினர் ஒவ்வொருவரும், பேணிப் போஷிக்கப் படும் ஆலயமே இல்லம். இறைவனின் இந்த இல்லத்தின் தலை சிறந்த அர்ச்சகர் அன்னையே. பூஜை அறை ஒவ்வொரு இல்லத்தின் நடுநாயகமாக இருக்க வேண்டும்; அதிலிருந்து வரும் மலர் மற்றும் ஊதுபத்தியின் நறுமணம், இல்லம் முழுதும் ஊடுருவி அதைப் பரிசுத்தப் படுத்த வேண்டும். இல்லத்தின் இதயமாக பூஜை அறையை ஆக்குவதில், தாய் ஒரு முன்னோடியாக இருக்க வேண்டும்.தனி நபர் தூய்மை, பணிவு, விருந்தோம்பல், நன்னடத்தை மற்றும் சேவைப் பணி ஆகியவற்றில், குழந்தைகள் மீது ஒழுங்குக் கட்டுப்பாட்டை, தாய் செயல்படுத்த வேண்டும். தானே முன்னுதாரணமாகச் செய்து காட்டி, தாய், குழந்தைகள் பெரியவர்களை மதிக்குமாறு இணங்கச் செய்வதோடு, காலையிலும் மாலையிலும்,சிறிது நேரம் பிரார்த்தனை மற்றும் தியானத்திற்காக ஒதுக்க வேண்டும். பணிவே,இல்லத்தில் பரவி நிறைந்திருக்க வேண்டிய நறுமணம். பயபக்தியே, ப்ரேமையை எண்ணையாகவும், இறை நம்பிக்கையைத் திரியாகவும் வைத்து ஏற்றப்படும் விளக்கு. உங்களது இறைநம்பிக்கை மற்றும் சக்தியின் மூலம், பக்தியும்,சிரத்தையும் இந்த தேசத்தில் அதிகமாகட்டும் என நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன்.
உங்கள் இதயமே, பரிசுத்தமான ப்ரேமையின் இருப்பிடம்.அது, முதன் முதலில், உங்களது இல்லங்களிலிருந்து வெளிப்படத் தொடங்க வேண்டும்- பாபா