azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 08 Dec 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 08 Dec 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Every passing day truly becomes holy, when you sanctify it by sadhana, not otherwise. Spiritual practices (Sadhana) can grow only in a field fertilised by love and nonviolence. Love or Prema is absolutely essential for devotion to God (bhakti). The love you have towards material objects, name, fame, wife and children, etc., should be sanctified by being subsumed by the more overpowering Love of God. Add two spoons of water to two seers of milk, the water too is appreciated as milk! At present your sadhana can be described only as mixing two litres of water with two spoons of milk, isn’t it? Let love for God fill and thrill your heart; then, you cannot hate any one, you cannot indulge in unhealthy rivalries, and you will not find fault with any one. Life will become soft, sweet and smooth. (Divine Discourse, Jan 1, 1967)
YOU MUST KEEP THE GOAL OF GOD-REALISATION BEFORE YOUR MIND’S EYE, WHILE BEING ENGAGED IN THE NOISY AND HILARIOUS PROCESSION OF DAILY LIFE. - BABA
வேறு எதிலும் இன்றி, நீங்கள் ஆன்மீக சாதனையால் பரிசுத்தப் படுத்தும் போது, கழியும் ஒவ்வொரு நாளும் புனிதமானதாகி விடுகிறது. ப்ரேமை மற்றும் அஹிம்சையால் உரமிடப்படும் ஒரு நிலத்தில் மட்டுமே, ஆன்மீக சாதனைகள் வளர முடியும். இறைவன் பால் கொள்ளும் பக்திக்கு ப்ரேமை மிகவும் இன்றியமையானதாகும். உலகியலான பொருட்கள், பெயர், புகழ், மனைவி மக்கள் போன்றவை மீது நீங்கள் கொள்ளும் அன்பை ,அதிகம் ஆட்கொள்ளும் இறைவன் மீது கொள்ளும் ப்ரேமைக்குக் கீழ் கொண்டு வருவதன் மூலம், புனிதப் படுத்தப் பட வேண்டும். இரண்டு படி பாலில், இரண்டு கரண்டி நீரைச் சேர்த்தால், அந்தத் தண்ணீரின் மதிப்பும் கூட பாலளவிற்கு அதிகமாகி விடுகிறது ! தற்காலத்தில், உங்களது ஆன்மீக சாதனையை, இரண்டு லிட்டர் நீரில் இரண்டு கரண்டி பாலைச் சேர்ப்பது போன்றதே என்று மட்டுமே தான் வர்ணிக்க முடியும் இல்லையா?இறைவன் பால் கொள்ளும் ப்ரேமை உங்களது இதயத்தைப் புல்லரிக்கச் செய்து நிரப்பட்டும் ; பின்னர் உங்களால் எவரையும் வெறுக்க முடியாது, ஆரோக்கியமற்ற போட்டிகளில் நீங்கள் ஈடுபட முடியாது; மேலும் நீங்கள் எவரிடமும் குறை காண மாட்டீர்கள்.வாழ்க்கை மிருதுவானதாகவும், இனிமையானதாகவும்,இதமானதாகவும் ஆகி விடும்.
ஆத்ம சாக்ஷாத்காரம் எனும் குறிக்கோளில் உங்கள் கவனத்தை உங்கள் முன் வைத்துக் கொண்டு , இரைச்சல் நிறைந்ததும், வேடிக்கையானதும் ஆன வாழ்க்கை எனும் ஊர்வலத்தில், நீங்கள் பங்கேற்க வேண்டும்.