azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 05 Dec 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 05 Dec 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

The Lord values your attitude behind every action. Yad bhavam, tad bhavati - you become what you feel. Hence transmute every act into worship and derive maximum joy. Sai is in every being; so do not slight anyone. Revere and serve all to the best of your ability. When someone asks for water to quench their thirst and you offer them a cup, feel that you are offering it to Me; then, that act purifies and cleanses you. It is not the person in need that you serve, you are serving God who is in you and them. Karma (action) is the flower and Jnana (wisdom) is the fruit. The flower becomes fruit in fullness of time when you guard it free from pests. Charcoal is wood that was burnt under the baptism of fire. With time, charcoal transforms to white, light ash that flies in the wind. Rigorously purify your mind in the fire of wisdom until you gain success. (Divine Discourse, Nov 22, 1967)
PURE LOVE WILL BE FOSTERED ONLY WHEN NONVIOLENCE IS PRACTICED. - BABA
ஒவ்வொரு செயலுக்குப் பின் இருக்கும் உங்களது மனப்பாங்கினைத் தான் இறைவன் மதிக்கிறான். யத் பாவம், தத் பவதி-நீங்கள் எதை உணர்கிறீர்களோ, நீங்கள் அதுவாகவே ஆகிறீர்கள்.ஒவ்வொரு செயலையும் இறை வழிபாடாக உருமாற்றி, அதிக பட்ச சந்தோஷத்தைப் பெறுங்கள். சாய் ஒவ்வொரு ஜீவராசியிலும் இருக்கிறார்; எனவே எவரையும் தாழ்வாகக் கருதாதீர்கள். உங்களால் முடிந்த அளவு அனைவரையும் போற்றி, அனைவருக்கும் சேவை ஆற்றுங்கள். யாராவது, அவர்களது தாகத்தைத் தணித்துக் கொள்வதற்காகத் தண்ணீர் கேட்டு, நீங்கள் அவர்களுக்கு ஒரு கோப்பை அளிக்கும் போது, அதை நீங்கள் எனக்கே அளிப்பதாகக் கருதுங்கள்; பின்னர் அந்தச் சேவை, தூய்மையடைந்து, உங்களைப் பரிசுத்தமாக்குகிறது. தேவை உள்ள ஒருவருக்கு நீங்கள் சேவை ஆற்றவில்லை;உங்களுள்ளும்,அவருள்ளும் உள்ள இறைவனுக்கு நீங்கள் சேவை ஆற்றுகிறீர்கள்.கர்மாவே மலர், ஞானமே பழம். நீங்கள் பூச்சிகளிலிருந்து அதைக் காப்பாற்றினால், மலர், காலப்போக்கில், பழமாகி விடுகிறது. அக்னியில் எரித்துப் புடம் போடப்பட்ட மரத்துண்டே, கரியாகும். காலப் போக்கில், கரித்துண்டு காற்றில் பரந்து விடும், லேசான, வெள்ளை விபூதியாக ஆகி விடுகிறது. வெற்றி பெறும் வரை,உங்கள் மனதை, ஞானம் எனும் அக்னியில், தீவிரமாகப் புடம் போடுங்கள்.
அஹிம்சையைக் கடைப்பிடித்தால் மட்டுமே, பரிசுத்தமான ப்ரேமை
பேணிக் காக்கப் படுகிறது- பாபா