azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 02 Dec 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 02 Dec 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
You must cultivate love towards everyone, however distinct the character and capacity of each may be. Though the same blood flows through the entire body, the eye cannot smell, the ear cannot taste, the nose cannot see, and so on. So, do not amplify the distinctions and quarrel with one another. Emphasize upon the basic brotherhood of mankind and the principle of love. Just like sugar that is fully dissolved in the cup of water is invisible, but patent to the tongue in every drop, so too the Divine is invisible but immanent; He is capable of being experienced in every individual, whether rich, poor, educated or illiterate. Repeat the names of the Lord (Namasmarana) incessantly. Dwell on His glory and compassion which those names reveal to you. Taste the sweetness that is in the heart of every one. Then, it will be easier for you to visualise Him in all, to love Him in all, and to adore Him in all. (Divine Discourse, Jul 31, 1967)
REMOVE THE ROOTS OF THE WEED OF EGOISM FROM THE FIELD OF YOUR HEART
- THAT IS ENOUGH SADHANA. - BABA
ஒவ்வொருவரின் குணமும், திறனும் எவ்வளவு தனிப்பட்டதாக இருந்தாலும், நீங்கள் ஒவ்வொருவருடனும் ப்ரேமையை அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டும். ஒரே இரத்தம் உடல் முழுவதும் பாய்ந்தாலும், கண்கள் நுகரமுடியாது, காது பார்க்க முடியாது,மூக்கு காண முடியாது. எனவே, வேறுபாடுகளை மிகைப் படுத்தி, ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள்.மனித குலத்தின் அடிப்படை சகோதரத்துவத்தையும், ப்ரேம தத்துவத்தையும் வலியுறுத்துங்கள். ஒரு கோப்பை தண்ணீரில் முழுவதும் கரைந்த சர்க்கரை, கண்ணுக்குத் தெரியாமல் இருந்து, ஆனால்,ஒவ்வொரு சொட்டிலும் நாக்கில் புலப்படுவது போல, இறைவனும் கண்களுக்குப் புலப்படாமல் இருந்தாலும், உள்ளுறைகிறான்; ஒவ்வொரு மனிதனுள்ளும், பணக்காரனோ, ஏழையோ, பண்டிதனோ, பாமரனோ, அவனை அனுபவிக்க முடியும். இறை நாமஸ்மரணையை இடையறாது செய்யுங்கள். அந்தத் திருநாமங்கள் வெளிப்படுத்தும் அவனது மகிமை மற்றும் கருணையை தியானியுங்கள். ஒவ்வொருவரின் இதயத்தில் இருக்கும் இனிமையைச் சுவையுங்கள். பின்னர், அனைவருள்ளும் இறைவனைக் காண்பதும், அனைவருள்ளும் இருக்கும் அவனை நேசிப்பதும், அனைவருள்ளும் இருக்கும் அவனைப் போற்றுவதும், உங்களுக்கு எளிதாகி விடும்.
உங்கள் இதயம் எனும் நிலத்திலிருந்து, அஹங்காரம் எனும் களையை, வேரோடு பிடுங்கி எறிந்து விடுங்கள் – அதுவே போதுமான ஆன்மீக சாதனையாகும் – பாபா