azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 25 Nov 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 25 Nov 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
You should have less luggage (desires) in this long journey of life. Therefore, it is said: ‘less luggage more comfort makes travel a pleasure.’ So, ceiling on desires is what you have to adopt today. You have to cut short your desires day by day. You are under the mistaken notion that happiness lies in the fulfilment of desires. But in fact, happiness begins to dawn when desires are totally eradicated. When you reduce your desires, you advance towards the state of renunciation. You have many desires. What do you get out of them? You are bound to face the consequences when you claim something as yours. When you claim a piece of land as yours, then you will have to reap the harvest. This instinct of ego and attachment will put you to suffering. Never ever forget that you will be blissful the moment you give up ego and attachment! (Divine Discourse, Mar 14, 1999)
REMOVE THE ROOTS OF THE WEED OF EGOISM FROM THE FIELD OF YOUR HEART
- THAT IS ENOUGH SADHANA. - BABA
இந்த நீண்ட வாழ்க்கைப் பயணத்தில், நீங்கள் குறைந்த சுமையைக் (ஆசைகள் ) கொண்டிருக்க வேண்டும். அதனால் தான், ‘’ குறைந்த சுமை, நிறைந்த சுகம், பயணத்தை ஒரு இன்பமயமானதாக ஆக்குகிறது ‘’ என்று கூறப் படுகிறது. எனவே, இன்று, ஆசைகளுக்கு வரையறை என்பதைத் தான் நீங்கள் பின்பற்ற வேண்டும். நீங்கள் நாளுக்கு நாள் உங்களது ஆசைகளைக் குறைத்துக் கொண்டே வர வேண்டும். ஆசைகள் பூர்த்தியாவதில் தான் சந்தோஷம் இருக்கிறது என்ற தவறான கருத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.ஆனால், ஆசைகளை முழுமையாக நீக்கி விடும் போது தான் சந்தோஷம் உதயமாக ஆரம்பிக்கிறது. உங்கள் ஆசைகைளக் குறைத்துக் கொள்ளும் போது, நீங்கள் துறவு நிலையை நோக்கி முன்னேறுகிறீர்கள். உங்களுக்கு பல ஆசைகள் இருக்கின்றன. அதிலிருந்து உங்களுக்கு என்ன கிடைக்கிறது? எதையாவது ஒன்றை உங்களுடையது என நீங்கள் உரிமை கொண்டாடும் போது, அதன் விளைவுகளை நீங்கள் எதிர் கொண்டே ஆக வேண்டும். ஒரு நிலத்தை உங்களுடையது என்று நீங்கள் கொண்டாடும்போது,அதில் விளைவதை நீங்கள் அறுவடை செய்தே ஆக வேண்டும். அஹங்காரம் மற்றும் பற்றுதலின் உணர்வுகள் உங்களை துன்பத்தில் ஆழ்த்தும். அஹங்காரம் மற்றும் பற்றுதலை விட்டு விட்ட அந்தத் தருணமே, நீங்கள் ஆனந்த மயமாக ஆகி விடுவீர்கள் என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள் !
உங்கள் இதயம் எனும் நிலத்திலிருந்து, அஹங்காரம் எனும் களையை, வேரோடு பிடுங்கி எறிந்து விடுங்கள் – அதுவே போதுமான ஆன்மீக சாதனையாகும் - பாபா