azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 19 Nov 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 19 Nov 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Study the lives of our great women who were role-models of patience, fortitude, compassion and sacrifice. Since ancient times, the feminine aspect of the Divine is worshipped. Vedas declare: Where women are honoured and esteemed, there Divinity is present in full potency. Unfortunately, today men consider it demeaning to honour women. This is wrong and is a sign of ignorance. Men should give a honourable place to women. The woman is the Goddess of Prosperity for her home (Grihalakshmi), virtuous spouse (Dharmapatni), mistress of the house (Illalu) and the better half (Ardhangi). People gloat over petty titles conferred on them, but these highest titles conferred on women are valid for all times. A home without a woman is a jungle. Men should not make women weep and shed tears. A home where a woman sheds tears will be ruined. Women too, should endeavor to develop qualities of empathy, compassion, love and sacrifice. They should change themselves and help transform men and children. (Divine Discourse, Nov 19, 1995)
THE WELFARE OF WOMEN IS AN INDEX OF THE WELFARE OF A NATION. - BABA
பொறுமை, மன உறுதி,பரிவு மற்றும் தியாகத்தின் முன்னுதாரணங்களாகத் திகழ்ந்த , நமது தலை சிறந்த பெண்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். பண்டைய காலங்களிலிருந்தே, தெய்வீகத்தின் தேவி அம்சம் வழிபடப் படுகிறது. எங்கு பெண்கள் மதிக்கப் பட்டு கௌரவிக்கப் படுகிறார்களோ , அங்கு தெய்வீகம், முழுமையான சக்தியுடன் விளங்கும் என வேதங்கள் பறைசாற்றுகின்றன.துரதிருஷ்ட வசமாக, இன்று, பெண்களை மதிப்பது கேவலமானது என ஆண்கள் கருதுகிறார்கள். இது தவறானதும், அறியாமையின் ஒரு அறிகுறியும் ஆகும். ஆண்கள், பெண்களுக்கு, ஒரு மதிப்புள்ள இடத்தை அளிக்க வேண்டும்.பெண், தனது வீட்டின், செல்வத்தின் தெய்வம் (க்ருஹலக்ஷ்மி), தார்மீகமான மனைவி ( தர்ம பத்னி), இல்லத்தரசி ( இல்லாளு) மற்றும் ஆணின் சிறந்த பாதி பாகமும் ( அர்த்தாங்கி ) ஆவாள்.மக்கள் தங்களுக்கு அளிக்கப் பட்ட அற்பமான பட்டங்களைக் குறித்து உவகை கொள்கிறார்கள், ஆனால் பெண்களுக்கு அளிக்கப் பட்டுள்ள, இந்த தலைசிறந்த பட்டங்கள் எக்காலத்திற்கும் பொருத்தமானவை. ஒரு பெண் இல்லாத இல்லம் ஒரு காடே. ஆண்கள், பெண்களை அழச்செய்து , கண்ணீர் வடிக்குமாறு செய்யக் கூடாது. ஒரு பெண் கண்ணீர் வடிக்கும் இல்லம் நாசமடைந்து விடும். பெண்களும் கூட, பச்சாதாபம், பரிவு, ப்ரேமை மற்றும் தியாகம் போன்ற குணங்களை அபிவிருத்தி செய்து கொள்ள பாடுபட வேண்டும். அவர்கள் தங்களையே மாற்றிக் கொண்டு, ஆண்களும், குழந்தைகளும், சீரடைவதற்கு உதவ வேண்டும்.
பெண்களின் நலனே, நாட்டு நலனின் ஒரு அறிகுறியாகும் - பாபா