azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 13 Nov 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 13 Nov 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Some say that since this is Kali yuga, falsehood alone can succeed. But in spite of all appearances, honesty is still the best policy. One lie must be buttressed by a hundred others; whereas being truthful is easy, safe and simple. It is a hard job to maintain a false stand and so, it is always safe to be straight and honest. Do not take the first false step and then be led, on and on, to perdition. Truth is one's real nature and when you are yourself, there comes a great flood of joy welling up within you. When you deny and deceive yourself, shame darkens your mind and breeds fear. You take the path of falsehood because of the rajasik (passionate) qualities of lust, greed, hate and pride. Contentment, humility, and detachment - these keep you on the path of Truth. Truth will always triumph; do not doubt that in the least. [Divine Discourse, Oct 24, 1965]
சிலர், இந்த கலியுகத்தில் பொய்மையே வெல்லும் என்று கூறுகிறார்கள். ஆனால், எல்லாவிதமான தோற்றங்கள் இருந்தாலும் கூட, நேர்மையே இப்போதும் மிகச் சிறந்த கொள்கையாகும். ஒரு பொய்யை சமாளிக்க, ஒரு நூறு பொய்கள் கூற வேண்டி வரும்;ஆனால், உண்மையாக இருப்பது எளிதானதும், பாதுகாப்பானதும் மற்றும் இயல்பானதும் ஆகும். ஒரு தவறான நிலையை தக்க வைப்பது ஒரு கடினமான வேலையே; எனவே, எப்போதும், நேரடியாகவும், நேர்மையாகவும் இருப்பதே பாதுகாப்பானது. தவறான முதல் படியை எடுத்து வைத்தும், பின்னர் அதைத் தொடர்ந்து மேலும் மேலும் தவறு செய்து அழிவிற்கு இட்டுச் செல்லப் பட்டும் விடாதீர்கள். சத்தியமே உங்களது உண்மையான இயல்பாகும்; எப்போது நீங்கள், நீங்களாக இருக்கிறீர்களோ, உங்களுள் ஒரு ஆனந்த வெள்ளம் ஊற்றெடுக்கும். நீங்கள், உங்களையே மறுத்து, ஏமாற்றிக் கொள்ளும் போது, உங்கள் மனம் அவமானத்தால் இருளடைந்து, அச்சத்தை உருவாக்கும். ரஜோ குணங்களான காமம், பேராசை, த்வேஷம் மற்றும் தற்பெருமையின் காரணமாகவே, நீங்கள் பொய்மையின் பாதையில் செல்கிறீர்கள். திருப்தி, பணிவு, மற்றும் பற்றின்மை ஆகியவை உங்களை சத்தியத்தின் பாதையில் இருக்கச் செய்யும். சத்தியமே எப்போதும் வெல்லும்; இதைக் கொஞ்சம் கூட சந்தேகப்படாதீர்கள்.