azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 11 Nov 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 11 Nov 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
You are most fortunate to participate in this (annual global) Akhanda Bhajan. Do not lose this great opportunity to lovingly sing the Lord’s Name. Meera drank the cup of poison with the Name on her tongue and it turned into nectar. Bhartrihari bewailed his lot, "Lord, these pleasures are eating me up; they don't allow me to be myself. No! I will liberate myself from their clutches. I shall take refuge in the undiminishable bliss, the reservoir of joy, the Lord. I shall not crave for objects (padartha); I shall yearn for the Highest Good (Parartha)". Devotion and faith ensure the gift of knowledge of the Spirit which is the greatest prize for the great adventure of birth, life and death. Endeavour to remember this fact when you sing. Whatever you do, whoever you are, whatever work you perform, you will definitely succeed, provided you do not give up the recitation of His Name with love and devotion incessantly. (Divine Discourse, Nov 13, 2007.)
FIRMLY BELIEVE THAT THE LORD’S NAME IS THE BOAT, WHICH WILL TAKE YOU OVER THE SEA OF WORLDLY LIFE. THE NAME IS MORE EFFICACIOUS THAN THE CONTEMPLATION OF THE FORM. - BABA
இந்த (வருடாந்திர ,அகில உலக) அகண்ட பஜனையில் பங்கு பெறும் நீங்கள் மிகப் பெரிய அதிருஷ்டசாலிகள். இறைவனது திருநாமத்தை, அன்புடன் பாடுவதற்கான இந்த மிகச் சிறந்த வாய்ப்பினை நழுவ விடாதீர்கள். பக்த மீரா, தனது நாவில் இறைவனது திருநாமத்தை ஏந்தியவாறே அருந்திய விஷம், அம்ருதமாக மாறி விட்டது. பத்ருஹரி, ‘’ பகவானே ! இந்த சுகங்கள் என்னை விழுங்கிக் கொண்டு இருக்கின்றன; நான், நானாக இருக்க இவை என்னை அனுமதிப்பதில்லை. இல்லை! நான் அவற்றின் பிடிகளிலிருந்து என்னையே விடுவித்துக் கொள்வேன். வற்றாத ஆனந்தம் மற்றும் மகிழ்ச்சிக் கடலான இறைவனிடம் சரணடைவேன். நான் உலகியலான பொருட்களுக்காக ( பதார்த்த) அல்லாது, தலைசிறந்த நன்மையான இறைவனுக்காக ( பரார்த்த ) ஏங்குவேன் ‘’ என்று தனது நிலைமையை எண்ணிப் புலம்பினாராம். பக்தியும், நம்பிக்கையும், பிறப்பு, வாழ்க்கை மற்றும் இறப்பு எனும் தலைசிறந்த சாகசத்தின் மிக உன்னதமான பரிசான ஆத்ம ஞானத்தை உறுதி செய்கின்றன. நீங்கள் பாடும்போது, இந்த உண்மையை மனதில் கொள்ள விழையுங்கள். அவனது திருநாமத்தை அன்பு மற்றும் பக்தியுடன் இடையறாது உச்சரிப்பதை நீங்கள் விடாமல் இருந்தால், நீங்கள் எதைச் செய்தாலும், நீங்கள் யாராக இருந்தாலும், நீங்கள் எந்தப் பணியைச் செய்தாலும், நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.
இறைவனது திருநாமமே,ஸம்ஸார சாகரத்தைக் கடப்பதற்கான தோணி என்பதை உறுதியாக நம்புங்கள். இறை ரூபத்தை தியானிப்பதை விட, இறை நாமம் அதிக பயனளிக்க வல்லதாகும் - பாபா