azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 31 Oct 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 31 Oct 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Cultivate nearness to Me in your heart and you will be rewarded. Then you too will acquire a fraction of the Supreme Love. Do not lose the contact and the company; for, it is only when the coal is in contact with the live embers that it can also become a live ember. You are truly fortunate, blessed with a great chance. This chance will not come your way again, beware of that. If you cannot and do not cross the sea of grief now, when again can you get such a chance? Engage yourself in spiritual discipline, spiritual thoughts, and spiritual company. Let the past go its way. At least from now on seek to save yourself. Never yield to doubt or unsteadiness. Do not get shaken in mind; do not allow faith to decline. That will only add to the grief you already suffer from. Hold fast - that must be your vow. (Divine Discourse, Oct 10, 1964)
FOLLOW THE MASTER, FACE THE DEVIL, FIGHT TILL THE END AND FINISH THE GAME. - BABA
உங்கள் இதயத்தில் என்னுடனான நெருக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பலன் பெறுவீர்கள். நீங்களும் கூட, தலை சிறந்த ப்ரேமையின் ஒரு பகுதியை அடைவீர்கள். அந்தத் தொடர்பையும், தோழமையையும் இழந்து விடாதீர்கள்; ஏனெனில், நிலக்கரி, தணலோடு தொடர்பு கொண்டு இருக்கும் போதுதான், அதுவும் ஒரு தணலாக மாற முடியும். நீங்கள், உண்மையில், ஒரு மிகச் சிறந்த வாய்ப்பினைப் பெற்ற அதிர்ஷ்டசாலிகளே. இந்த வாய்ப்பு மீண்டும் உங்களுக்குக் கிட்டாது என்பதை உணர்ந்திருங்கள். துன்பம் எனும் கடலை இப்போது உங்களால் கடக்க முடியாமலோ அல்லது நீங்கள் அதைக் கடக்காமலோ இருந்தால், நீங்கள் மறுபடியும் எப்போது இப்படிப் பட்ட ஒரு வாய்ப்பைப் பெற முடியும் ? உங்களை நீங்களே ஆன்மீகக் கட்டுப்பாடு, ஆன்மீக சிந்தனைகள் மற்றும் ஆன்மீக நட்பு வட்டத்தில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். கடந்த காலம் கடந்ததாகவே இருக்கட்டும். குறைந்த பட்சம் இப்போதிலிருந்தாவது, உங்களைக் காப்பாற்றிக் கொள்வதை நாடுங்கள். சந்தேகத்திற்கோ அல்லது தடுமாற்றத்திற்கோ இடமளிக்காதீர்கள். மனதில் கலக்கம் அடையாதீர்கள்; நம்பிக்கையைக் குறைய விடாதீர்கள். அது நீங்கள் ஏற்கனவே படும் துயரத்தை அதிகமாக்கவே செய்யும். இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்- அதுவே இப்போது, உங்களது விரதமாக இருக்க வேண்டும்.
இறைவனைப் பின்பற்றி, இன்னலை எதிர்கொண்டு, இறுதி வரை போராடி, இந்த விளையாட்டில் வெல்லுங்கள்- பாபா