azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 30 Oct 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 30 Oct 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
The eagle is pestered by crows so long as it has a fish in its beak. They swish past that to steal the fish out of its mouth. They pursue the bird wherever it sits for a little rest. At last, it gives up the attachment to the fish and drops it from its beak; the crows fly behind it and leave the eagle free. So, leave off sense pleasures and the crows of pride, envy, malice and hatred will fly away, for they want only carrion. Practise renunciation from now on, so that you may set out on the journey when the call comes, and you never know when that will happen. Else at that moment, you will be in tears, when you think of the house you have built, the property you have accumulated, the fame you have amassed, and the trifles you have won. Know that all this is for the fleeting moment: develop attachment for the Lord, who will be with you wherever you go. (Divine Discourse, Oct 10, 1964.)
A TRUE HUMAN BEING IS ONE WHO HAS THE NOBLE QUALITIES OF ADHERENCE TO TRUTH,
DUTY, DEVOTION AND DISCIPLINE. - BABA
அதனுடைய அலகில் ஒரு மீன் இருக்கும் வரை தான், காகங்கள், கழுகைத் தொந்தரவு செய்யும். அதனுடைய வாயிலிருந்து மீனைத் திருடுவதற்காக, அவை பறந்து பறந்து வரும். அந்தப் பறவை சிறிது ஓய்விற்காக ஒரு கிளையில் எங்கு அமர்ந்தாலும், அவை, அதனைத் துரத்தும். இறுதியாக , அது, மீனின் மேல் இருந்த பற்றுதலை விடுத்து ,தனது அலகில் இருந்து அதைக் கீழே போட்டு விடும் ; காகங்கள் அதன் பின்னால் பறந்து சென்று, கழுகைச் சுதந்திரமாக விட்டு விடும். எனவே, புலனின்பங்களை விட்டு விடுங்கள்; தற்பெருமை, பொறாமை, வன்மம் மற்றும் த்வேஷம் எனும் காகங்கள், அவை அழுகிய இறைச்சியையே நாடுவதால், உங்களை விட்டுப் பறந்து ஓடி விடும். இறுதி அறைகூவல் வரும் போது, அந்தப் பயணத்தை நீங்கள் தொடருவதற்கு ஏற்றவாறு, இப்போதிலிருந்தே, பற்றின்மையைக் கடைப்பிடியுங்கள்; ஏனெனில் அந்த அறைகூவல் எப்போது வரும் என்பதை நீங்கள் ஒருபோதும் அறிய மாட்டீர்கள். இல்லை எனில், அந்தத் தருணத்தில், நீங்கள் கட்டிய வீடு,நீங்கள் சேர்த்து வைத்த சொத்து, நீங்கள் ஈட்டிய புகழ் மற்றும் நீங்கள் சாதித்த அற்ப விஷயங்கள் ஆகியவற்றை எண்ணி, நீங்கள் கண்ணீர் வடிப்பீர்கள். இவை அனைத்தும் தாற்காலிகமானவை என்பதை அறிந்து, நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுடன் இருக்கும் இறைவன் பால் பற்றுதலை அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள்.
சீரிய குணங்களான, சத்தியத்தைப் பற்றி ஒழுகுவது, கடமை, இறைபக்தி மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்டவனே ஒரு உண்மையான மனிதன் - பாபா